சென்னையில் முதல் முறையாக மின்சார ஏசி பேருந்து சேவை! எந்த வழித்தடங்களில் இயங்கும்? முழு விபரம் இதோ!
MTC AC Bus: புதிதாக இயக்கப்பட்டு வரும் இந்த பேருந்து எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

சென்னையில் முதல் முறையாக மின்சாரத்தில் இயங்கக்கூடிய குளிர்சாதன வசதிக்கொண்ட மின்சார பேருந்து அறிமுக விழா சென்னை பெரும்பாக்கத்தில் இன்று நடைப்பெற்றது. புதிதாக இயக்கப்பட்டு வரும் இந்த பேருந்து எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
ஏ.சி மின்சார பேருந்துகள்:
இந்த ஏசி மின்சார பேருந்து சேவையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் இன்று ரூ.49.56 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பெரும்பாக்கம் மின்சார பேருந்து பணிமனையை திறந்து வைக்கப்பட்டு, 135 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் (அதில் 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள்) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம்:
இந்த மின்சாரப் ஏசி பேருந்துகள் கீழ்க்கண்ட வழித்தடங்களில் இயக்கப்படும்.
| எண் | வழித்தட எண் | புறப்படும் இடம்-சேரும் இடம் | பேருந்துகள் எண்ணிக்கை |
| 1 | MAA2 | சென்னை விமான நிலையம் - சிறுசேரி ஐடி பூங்கா வழி: வழி: பல்லாவரம், பல்லாவரம் புதிய மேம்பாலம், வேல்ஸ் பல்கலைக்கழகம், ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குமரன் நகர், செம்மஞ்சேரி ஆலமரம், நாவலூர், சிப்காட் | 15 |
| 2 | 95X | கிளாம்பாக்கம் பே.நி. - திருவான்மியூர் வழி: வண்டலூர் உயிரியல் பூங்கா, வண்டலூர் கேட், பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம் கிழக்கு, கான்வென்ட், பல்லவன் நகர், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், காரப்பாக்கம், துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எஸ்.ஆர்.பி டூல்ஸ் | 05 |
| 3 | 555S | கிளாம்பாக்கம் பே.நி.- சோழிங்கநல்லூர் | 05 |
| 4 | 19 | தியாகராய நகர் -திருப்போரூர் வழி: சைதாப்பேட்டை, எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி, கேளம்பாக்கம், கோமான் நகர் சாலை சந்திப்பு, காலவாக்கம் | 05 |
| 5 | 102 | பிராட்வே - கேளம்பாக்கம் வழி: தலைமைச் செயலகம், சேப்பாக்கம், இராணி மேரி கல்லூரி, ஏ.எம்.எஸ் மருத்துவமனை, அடையார் ஓ.டி. இந்திரா நகர், எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி | 05 |
| 6 | 570/570S | கோயம்பேடு - கேளம்பாக்கம் / சிறுசேரி ஐடி பூங்கா வழி: எம்.எம்.டி.ஏ காலனி, வடபழனி, அசோக் பில்லர், காசி தியேட்டர், ஈக்காடுதாங்கல், CIPET, கிண்டி பே.நி., கான்கோட் / வேளச்சேரி (Check Post), குருநானக் கல்லூரி, வேளச்சேரி, எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர் [570: இந்துஸ்தான் கல்லூரி / 570S: சிப்காட் ) | 20 |
மேலே பட்டியலிடப்பட்டுள்ள 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படும். பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து மீதமுள்ள தாழ்தள குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து தெரிவித்துள்ளது.






















