மேலும் அறிய

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - காவல்துறை எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தநிலையில் தவறான தகவல்களை பரப்புபவர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டு பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரேனும், காவல்துறை அனுமதியின்றி சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்துவதாக கூறினால் அவர்களை நம்பி போராட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள். அவ்வாறு கலந்து கொள்பவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்ட நிலையில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 55 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வஜ்ரா வாகனங்களுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 329 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறைனர் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று மாலை வன்முறை நடைபெற்ற இடங்களை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.  மேலும் வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியின் வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். மேலும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

சின்னசேலத்தில் நடந்து என்ன...?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜூலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவி பள்ளி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவியின் பிரேதத்தை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவி உயிரிழந்தது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL SRH vs RR: சிக்ஸர் மழை! இறுதிவரை போராடிய ராஜஸ்தான்! வெற்றியுடன் தொடங்கிய ஹைதரபாத்
IPL SRH vs RR: சிக்ஸர் மழை! இறுதிவரை போராடிய ராஜஸ்தான்! வெற்றியுடன் தொடங்கிய ஹைதரபாத்
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL SRH vs RR: சிக்ஸர் மழை! இறுதிவரை போராடிய ராஜஸ்தான்! வெற்றியுடன் தொடங்கிய ஹைதரபாத்
IPL SRH vs RR: சிக்ஸர் மழை! இறுதிவரை போராடிய ராஜஸ்தான்! வெற்றியுடன் தொடங்கிய ஹைதரபாத்
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
Embed widget