Supreme Court Order : அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணையை தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணையை தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, பண மோசடி செய்ததாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணையை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் குமார், தேவ சகாயம் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ததுடன், வழக்கை தொடக்கத்திலிருந்து விசாரிக்க உத்தரவிட்டது.
வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது. மேலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கேட்டும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் படிக்க,