அதிகரிக்கும் டெங்கு; கரூர் அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் படுக்கை வசதிகள்
கரூர் காந்தி கிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
![அதிகரிக்கும் டெங்கு; கரூர் அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் படுக்கை வசதிகள் Dengue fever Bed facilities ready at Karur Government Medical College Hospital TNN அதிகரிக்கும் டெங்கு; கரூர் அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் படுக்கை வசதிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/29/02add0a35cd01998552ff012a5a089281701237683552113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
2 நபருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தயார் நிலையில் படுக்கை வசதிகள் இருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் அதி வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
உள் நோயாளிகள் அனுமதி சீட்டுகளை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் வரிசையில் காத்திருக்கின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு 39 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு வரும் நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வதற்காக ஏராளமான நோயாளிகள் நீண்ட வரிசையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பொதுமக்கள் முககவசம் அணிந்து விழிப்புணர்வுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் மருத்துவமனையில் நிலவேம்பு கசாயம் வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு பாதிப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில், டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதிகள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)