தொடரும் மின்வெட்டு: நிலக்கரிதான் பிரச்சினை..! பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.ர். நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்துக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஒடிசாவில் உள்ள தல்சர் சுரங்களில் இருந்து போதுமான நிலக்கரி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டியது அவசியமானதும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடிதத்தில், “தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு மட்டுமே இருக்கிறது. தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளது. உள்நாட்டு நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. பாரதீப், விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Despite sufficient production of coal, the same is not getting transported to ports.
— M.K.Stalin (@mkstalin) April 22, 2022
This serious issue would impact the post covid economic recovery if not addressed immediately.
I request Hon'ble @PMOIndia to direct @CoalMinistry to ensure daily supply of 72000 MT coal to TN. pic.twitter.com/fUyUhHig7C
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்