அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்-சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை
பொதுமக்கள் தங்களது புகாரை 9444042322 மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் புகார் செயலி உள்ளது அதையும் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
தீபாவளி பண்டிகை இந்த மாதம் 12ஆம் தேதி வர உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள இனிப்பு மற்றும் கார விற்பனை கடை உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு விற்பனையாளர்களுக்கு உணவு பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். சமையலறையில் உள்ள பொருட்களை பாதுகாப்பது, இனிப்பு மற்றும் காரங்களை தயாரிக்கும் கடைகளில் பாதுகாப்பு உபகரணங்கள், இனிப்பு மற்றும் காரங்களில் பயன்படுத்தக்கூடிய நிற ஊட்டிகளின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் இனிப்பு மற்றும் காரங்கள் எந்த அளவிற்கு நிறைவூட்டிகளை பயன்படுத்த வேண்டும் என பலகாரங்களை கொண்டு மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன், இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் பலகார கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எவ்வாறு இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என விளக்கி கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பண்டிகை காலங்களில் தற்காலிக இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிப்பவர்கள் வருவார்கள் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் எனவும் கூறப்பட்டது. பலகாரங்களை எவ்வாறு தயாரிக்க வேண்டும், பால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்புகளை எவ்வாறு பதப்படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் இனிப்பு மற்றும் கார உணவுகளை தயாரிக்கும் கடைகள் சேலம் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட உள்ளது. பதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பி அதின் பேரில் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 10 உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் 22 பகுதிகளில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் முதலில் தற்காலிகமாக கடை வைத்து நடத்தும் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களிடம் ஆய்வு நடத்துவார்கள். திருமண மண்டபங்களில் பலகாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்கள் வந்துள்ளது. அந்தப் பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் முதலில் ஆய்வு செய்வார்கள். பொதுமக்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பேரில் தற்காலிகமாக இனிப்புகளை தயாரிப்பவர்கள் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது புகாரை 9444042322 மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் புகார் செயலி உள்ளது அதையும் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் புகார் வேலை தெரிவிக்கலாம். அதேபோன்று இனிப்புகளில் நெய்க்கு பதிலாக டால்டா கலப்பது கண்டறியப்பட்டார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக இணைப்பு தயாரிக்கும் உரிமையாளர்களுக்கு தற்காலிக லைசென்ஸ் உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது அதனை பெற்றால் மட்டுமே உணவு பொருட்களை தயாரிக்க அனுமதி வழங்கப்படும். ஆவினை கெட்டுப் போன உணவுகள் விற்கப்படுவது குறித்த கேள்விக்கு, உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின் படி தனியார் மற்றும் அரசு, அன்னதானமும் இலவசமாக கொடுக்கும் உணவும் எதுவாக இருந்தாலும், அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று கூறினார்.