மேலும் அறிய

"திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்" - அன்புமணி ராமதாஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, ஆண்ட கட்சி என இருவருமே பணம் கொடுத்துள்ளனர். யார் ஜெயித்தாலும் தோற்றது ஜனநாயகம்தான்.

சேலத்தில் தனியார் ஹோட்டலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் பேசுகையில், “சேலத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை‌. குறிப்பாக ஒட்டுமொத்த காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 540 கோடியில் இத்திட்டம் சிறிய அளவில் துவங்கப்பட்டது. இதை விரிவு படுத்தி வரும் பட்ஜெட்டில் முதல்வர் நிதி ஒதுக்க வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி மேட்டூர் உபரிநீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் வறட்சியை சமாளிக்க தண்ணீரை சேமிக்க வேண்டும் என்றார். 3 தலைமுறையாக நடைபெறும் சேலம் பாதாள சாக்கடை திட்டம் அடுத்த தலைமுறையில் கூட நிறைவு பெறாது. இதற்கு சரியான திடமிடல் இல்லாததே காரணம் என்றார். தமிழகத்தில் 1.30 லட்சம் பேர் படித்த இளைஞர்கள் வேலை இன்றி உள்ளனர். வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதில் அரசு கவணம் செலுத்த வேண்டும். சேலம் இரும்பாலையில் காலியாக உள்ள 3,500 ஏக்கர் நிலத்தை உரியவர்களிடம் திருப்பி தர வேண்டும் அல்லது தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு போதும் தனியாரிடம் ஒப்படைக்க பாட்டாளி மக்கள் கட்சி விட மாட்டோம் என்று கூறினார். சேலம் மாநகரில் உள்ள ஈரடுக்கு மேம்பாலம் சரியான திட்டமிடல் இல்லாததால் அடுத்த 10 ஆண்டுகளில் இடிக்க வேண்டிய சூழல்தான் ஏற்படும். ஏற்காடு அடிவாரத்தில் குப்பைகள் எரிக்கப்படுவதை நிறுத்தவில்லை என்றால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

சேலம் விமான நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வர வேண்டும். விமான நிலையம் விரிவுபடுத்துவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை அரசு உடனடியாக முடிக்க வேண்டும். சேலம் - கர்நாடக எல்லையில் ஒருவரை சுட்டு கொன்ற கர்நாடக வனத்துறையினரை விரைந்து கைது செய்யவில்லை என்றால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் சூழல் ஏற்பட்டு விடும். என்எல்சி நிறுவனத்திற்கு புரோக்கராகவே வேளாண்த்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் செயல்படுகிறார். வேளாண்துறை அமைச்சரின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு முதல்வர் முற்றுபுள்ளி வைக்க வேண்டும். விரைவில் விற்க உள்ள என்எல்சி நிறுவனத்திற்கு புரோக்கராக வேளாண் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார்கள். ஒரு புறம் வேளாண் பட்ஜெட் போடப்படுகிறது மற்றொரு புறம் வேளாண் நிலத்தை எடுக்கிறார்கள். இந்த போக்கை மாற்றவில்லை என்றால் வேளாண் பட்ஜெட்டின் போது நேரில் சென்று போராடுவோம் என்றார். ஆன்லைன் சட்ட மசோதாவிற்கு ஏன் கையெழுத்து போட மறுக்கிறார் என ஆளுநர் விளக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் 15 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆளுநர்தான் காரணம். ஆன்லைன் கம்பெனிக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார். இதற்கு தமிழக அரசும் மெத்தனமாக இருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிக்கூத்து. இது ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய அவப்பெயர். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பணம் மற்றும் பரிசுகளை கொடுத்து தேர்தலை நடத்த வேண்டுமா என கேள்வி எழுப்பினார். 1 மாதம் ஒட்டுமொத்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியை குத்தகைக்கு எடுத்து கொண்டதால் தமிழக அரசு பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. உலகத்திற்கே தெரிந்த விஷயம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் இருக்குமா? ஆளும்கட்சி, ஆண்ட கட்சி என இருவருமே பணம் கொடுத்துள்ளனர். இதில் யார் ஜெயித்தாலும் தேற்றது ஜனநாயகம்தான். 

2026 ல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். அதற்கான பணி நாடாளுமன்ற தேர்தலில் துவங்கப்படும். திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். லாபத்தில் இயங்கும் கேஸ் நிறுவனங்கள், கேஸ் விலையை உயர்த்த கூடாது. உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நல்ல படங்களை வாழ்த்துக்கிறேன் அவ்வளவுதானே தவிர நான் யாரையும் இயக்கவில்லை. நிழல் நிதிநிலை அறிக்கை இந்த வாரம் பாமக சார்பில் வெளியிடப்படும்” என அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
Embed widget