”2026 CM நான் தான்” EPS-க்கு விஜய் BYE! டார்கெட் உதயநிதி
இபிஎஸ்-ஐ ஓரங்கட்டிவிட்டு உதயநிதி vs விஜய் என களத்தை மாற்றுவதுதான் விஜய்யின் ப்ளானாக இருப்பதாகவும், அதிமுகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு விஜய் வந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். ஆதவ் மற்றும் பிரசாந்த் கிஷோர் செய்த சில சம்பவங்களும் அதற்கு அடித்தளமாகவே அமைகின்றன.
விஜய் அரசியல் எண்ட்ரி கொடுத்ததில் இருந்தே அதிமுக கூட்டணிக்கான தூது அனுப்பி வருவதாக பேச்சு இருக்கிறது. ஆனால் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்காத அதிமுக, விஜய்க்கு துணை முதலமைச்சர் ஆஃபர் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் கூட்டணி கதவுகளை திறந்தாலும், முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க ரெடியாக இல்லை. அதுவும் திமுகவை எதிரி என நேரடியாக சொல்லி அட்டாக் செய்து வரும் விஜய்யால் எதிர்க்கட்சியான அதிமுகவின் இடத்திற்கே சிக்கல் வரும் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
அதுவும் தவெகவின் விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு திமுக vs தவெக என்ற விவாதமே அதிகம் இருக்கிறது. மாநாடு, பரந்தூர் விசிட் உள்ளிட்ட சம்பவங்களால் தவெகவின் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதையெல்லாம் வைத்து கணக்கு போட்ட விஜய், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பதில் நாமே தனித்து நின்று திமுகவுடன் நேருக்கு நேர் போட்டியிடலாம் என நினைத்துள்ளார். அப்படி இருந்தால் தான் 2026 தேர்தலில் திமுக vs தவெக என களத்தை மாற்றி அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என ப்ளான் போட்டுள்ளார்.
குறிப்பாக உதயநிதி vs விஜய் என்பதே தவெகவின் திட்டமாக இருக்கிறது. அதிமுக பக்கம் இளம் தலைவர்கள் முகமாக யாரும் இல்லாதது விஜய்க்கு ப்ளஸாக அமைந்துள்ளது. தனக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை வாக்குகளாக மாற்றுவதற்கான வேலைகளை விஜய் செய்து வருகிறார். திமுக பக்கமும் துணை முதலமைச்சர் உதயநிதியை வைத்து இளைஞர்கள் வாக்குகளை இழுத்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே மறைமுகமாக போட்டாபோட்டி நடந்து வருகிறது.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற மெசேஜை தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் தவெக ஓராண்டு விழாவில் சொன்னார். அடுத்த 62 வாரங்கள் விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர் என சொல்லி அதிமுகவை அட்டாக் செய்தார். பிரசாந்த் கிஷோரும் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் கூட்டணி இல்லை , விஜய் தனித்து தான் களமிறங்குகிறார் என திட்டவட்டமாக சொல்லியுள்ளார்.
இதனால் அதிமுக பக்கமும் உதயநிதி, விஜய்க்கு போட்டியாக இபிஎஸ்-ன் மகன் மிதுன் பழனிசாமியை கொண்டு வரலாம் என அதிமுகவினர் இபிஎஸ்-க்கு யோசனை சொல்லி வருவதாக தெரிகிறது. இந்தநிலையில் விஜய் தலைமையில் தான் கூட்டணி அமையுமா? எந்தெந்த கட்சிகள் விஜய்யுடன் இணைந்து பயணிக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.





















