Vikravandi Bypoll : அதிமுக முடிவு நல்லது: பாமக வெற்றி பெற்றால்? மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி
நானும் ஓட்டு போடுகிறேன், அரசியல் பேச உரிமை உண்டு மதுரை ஆதினம் காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி
அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது நல்லது தான் மதுரை ஆதீனம். திமுகவை எதிர்த்து பாமக வெற்றி பெற்றால் தான் உண்டு என பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். நானும் ஓட்டு போடுகிறேன், அரசியல் பேச உரிமை உண்டு மதுரை ஆதினம் காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் தற்பொழுது காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடு பிரிக்க துவங்கியுள்ளது. முக்கியமாக விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியாக இருக்கின்ற தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிட மாட்டோம் என விலகி விட்டனர்.
தற்பொழுது இடைத்தேர்தலில் பிரதான கட்சியாக திமுக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி, தற்பொழுது மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம் இருக்கு ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். அப்பொழுது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவரை தரிசனம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் தெரிவித்ததாவது :
கோவில் மாநகர் காஞ்சிபுரத்தில் பல்வேறு கோயில்கள் உள்ளன. மிகவும் சிறப்பான ஊர் காஞ்சிபுரம் மாநகர் . காஞ்சிபுரம் வந்ததில் மிக மகிழ்ச்சி. நித்யானந்தா தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் , அவரை மடத்தை விட்டு அப்பொழுது நீக்கப்பட்டு விட்டார் இனி அவர் நுழைந்தாலும் விடமாட்டார். நாட்டுக்குள்ள அவரு வந்தாலே கைது செய்யப்படுவார்.
அதிமுக முடிவு சரிதான்
அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்தது நல்லது தான். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் . பாமக வெற்றி பெற்றால் உண்டு. இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி அதிக செல்வாக்கு உண்டு . எனவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியினருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தமிழர் எனக் கொந்தளித்த ஆதினம்
அரசியல் கருத்துக்களை ஏன் நான் சொல்லக்கூடாது. ஜனநாயக நாட்டில் நான் ஓட்டு போடுகிறேன். ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் கூறுகிறார்கள் அல்லவா. இஸ்லாமிய அமைப்பினர் கூறுகிறார்கள் அல்லவா. அதேபோன்று நாங்கள் ஏன் சொல்லக்கூடாது. நாங்கள் சொல்லாமல் இருந்தால் என் தமிழர்களை கொலை செய்வார்கள் அதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா ? தமிழ்நாட்டில் இருக்கிறேன் நான் தமிழன் நானும் ஓட்டு போடுகிறேன் . எனக்கு ஓட்டு உரிமை உள்ளது எனக்கும் உரிமை உள்ளது. வயிற்று எரிச்சலில் தான் தமிழர்களின் கொன்றார்கள் , அதை மக்கள் மறந்துட்டார்களே என்ற வைத்த எரிச்சலில் தான் என தெரிவித்தார்.