மேலும் அறிய

கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் - பொன்.ராதாகிருஷ்ணன்

 கூட்டணி குறித்து முடிவெடுக்க மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், கூட்டணி குறித்து அவர் முடிவு செய்து அறிவிப்பார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவு செய்வார் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றி சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜகவினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு  பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், ‘வரும் 31ஆம் தேதிக்கு பிறகு பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்குவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார். அதிமுகவுடனான கூட்டணி குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடினோம். தனித்து போட்டி என்கிற கேள்விக்கு தற்போது அவசியம் ஏற்படவில்லை.  கூட்டணி குறித்து முடிவெடுக்க மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், கூட்டணி குறித்து அவர் முடிவு செய்து அறிவிப்பார். அதிமுக உடன் கூட்டணி சுமூகம், சமூகம் இல்லை என்ற எந்தக் கருத்தும் நான் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19 ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள பகுதிகள் முழுவதும் ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தொடர்ந்து, அரசியல் கட்சிகள்  தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. 

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மூலமாக மொத்தம் 12 ஆயிரத்து 838 உறுப்பினர்களின் பதவிகள் நேரடி தேர்தல் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இது மட்டுமின்றி, மார்ச் 4-ந் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தல் மூலமாக 1,298 பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சியான தி.மு.க. முதல் எதிர்கட்சியான அதிமுக வரை தனது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget