Watch Video: மதுரைவீரன் ஐயனாரைப்போல...பிரதமரை புகழ்ந்துதள்ளிய அதிமுக எம்பி..!
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மதுரைவீரன் ஐயனார் போன்று மக்களை காக்கிறார் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியது. அப்போது, எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், இடைநீக்கத்தை பெறக்கோரியும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை அதன்பிறகு, தொடர் அமளியால் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
#JUSTIN | மதுரைவீரன் ஐயனார் போன்று மக்களை காக்கிறார் பிரதமர் மோடி - அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்https://t.co/wupaoCQKa2 | #AIADMK | #NarendraModi | #RajyaSabha | #WinterSession pic.twitter.com/4mI4jXN1Ly
— ABP Nadu (@abpnadu) December 15, 2021
இதனிடையே, அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் தொடர் அமளிக்கு இடையே பேசிய போது, அவரை எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசாவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். அவர் பல்வேறு சத்தங்களுக்கு இடையே பேச முற்பட்டபோது, பேசாத..பேசாதே என்று கூச்சலிட்டனர்.
அவர் தொடர்ந்து, "பேசாமல் தடுப்பது ஜனநாயகமாக இருக்காது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மதுரைவீரன் ஐயனார் போன்று மக்களை காக்கிறார் பிரதமர்" என்று பேசினார்.
முழு வீடியோ பார்க்க:
மதுரைவீரன் ஐயனார் போன்று மக்களை காக்கிறார் பிரதமர்
— ABP Nadu (@abpnadu) December 15, 2021
- மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேச்சு
(Video-Sansad TV )https://t.co/wupaoCQKa2 | #AIADMK | #RajyaSabha | #WinterSession pic.twitter.com/7IzQ0qN7mj
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்