மேலும் அறிய
Advertisement
Ma Madurai Festival: மதுரை...மதுரை...மதுரை.. மா மதுரை விழாவில் முதல்வர் ஸ்டாலினின் பெருமித பேச்சு - அப்படி என்ன பேசினார்?
மா மதுரை விழா நடக்கிற இந்த நாட்களில் மதுரை மாநகர் புத்துயிர் பெறுகிறது, என்றே சொல்லலாம். - தமிழக முதல்வர் பேச்சு.
பழமைக்கு பழமையா, புதுமைக்கு புதுமையா இளைஞர்கள் இயங்கணும். பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல் பண்பாட்டு விழாவாக இருக்கவேண்டும்
மா மதுரை விழா
மதுரையின் கடந்த காலப் பெருமிதத்தையும், நிகழ்காலச்சிறப்பையும், எதிர்கால நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக “மா மதுரை” விழா கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் மதுரையின் கலாச்சார, பண்பாடு, ஆன்மீகம், கலை, வரலாறு, விளையாட்டு, திருவிழா என ஏராளமான விசயங்களை தெரிந்து கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு இன்று ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் வரும் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த விழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அப்போது முதல்வர் பேசுகையில்..,” எல்லோருக்கும் தங்களின் ஊர் பெருமைக்குறியது, போற்றுதலுக்குறியது தான். குறிப்பாக மதுரை மாநகரம் என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமைகளை கொண்டது. இதனை நாம் விளக்க தேவை இல்லை. இந்தியாவில் பழமையான நகரில் மதுரையும் ஒன்றாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. மதுரை பாண்டிய மன்னர்கள் தலைமையிடமாக ஆட்சி செய்த நகரம் இது. தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்க முடியும் என கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியை காக்க மன்னன் தன்னுடைய உயிரை தந்த இடம்.
பெருமை சேர்க்கும் அமைச்சர்கள்
மன்னர் திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் ஆண்ட மண். புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கக்கூடிய ஊர். அனைத்து கலைகளும் இருக்கக்கூடிய பண்பாட்டு நகரம் இது. புகழ்பெற்ற சித்திரை திருவிழா மாபெரும் பண்பாட்டு விழாவும் நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையை அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் ம மாநகராட்சியாக உருவாக்கினார். அண்ணல் காந்தியடிகள் தன்னை அரையாடையாக மாற்றிக் கொள்ள வைத்த ஊர். அவ்வளவு ஏன் என்னுடைய வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய திமுக இளைஞரணி மாநாடு தொடங்கியது இங்கு தான். பல்வேறு பெருமை கொண்ட மதுரையை, மதுரக்காரங்க மட்டுமல்ல எல்லோரும் போற்றனும். நமது திராவிட மாடல் அரசு மதுரை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்களை கொடுத்து இருக்கிறது. தன்னுடைய சிறப்பான செயல்பாடுகளை இரண்டு பேரும் மதுரைக்கு நம் அரசுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரையில் இந்திரவிழா
மா மதுரை விழா நடக்கிற இந்த நாட்களில் மதுரை மாநகர் புத்துயிர் பெறுகிறது, என்று சொல்லலாம். வைகை நதி துவங்கும் இடம் முதல் கடலில் கலக்கும் இடம் வரையிலும் அதன் ஓரங்களில் இருக்கும் ஊர் வரை அனைத்தையும் மாதிரியாக விழாவில் செய்து வைத்திருப்பார்கள். மதுரையின் ஓவியங்களையும் வைத்திருப்பார்கள். மதுரையின் முக்கிய நபர்களின் படங்கள் இடம்பெற்றிருக்கும். விளையாட்டு, நடனம், வாணவேடிக்கை என விழா களைகட்டும். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெறும். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்திர விழாவைப் போல் நடத்தப்படுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதே போல் இந்தாண்டும் மா மதுரை போற்றும் விழா ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி. மதுரை போற்றும் விழாவை ஆர்வத்தோடு முன்னெடுத்துச் செல்லும் நிறுவனங்களை பாராட்டுகிறேன். ஊரைப் போற்றும் இளைஞர்களா வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊரை பாதுகாக்கணும் அதுவும் பழமை மாறாமல் பாதுகாக்கணும். அதே நேரத்தில் நவீன வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்கணும். பொழுதுபோக்கு விழாவக இல்லாமல் பண்பாட்டுப் விழாவாக இருக்கவேண்டும். தமிழினம் பெருமிதம், பெருமை உள்ளவர்கள். இது போன்ற விழாக்கள் கூட்டுறவு எண்ணத்தை உருவாக்கும். மக்கள் சாதி மத பேதங்கள் இன்றி தமிழ் பண்பாட்டு விழாக்களை எல்லாரும் ஒருங்கிணைத்து கொண்டாட வேண்டும். இது போன்ற விழாக்கள் மாநில முழுக்க நடத்த வேண்டும்” என பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion