ஓணம் பண்டிகை எதிரொலி; திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை என்ன?
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சராசரி நாட்களில் மல்லிகைப்பூ 300 முதல் 400 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மல்லிகை பூ - 2000 முதல் 2700 வரை விற்கப்பட்டு வருகிறது .
ஆவணி கடைசி முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ 2000 முதல் 2700 வரை ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பூக்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. வெள்ளோடு நிலக்கோட்டை செம்பட்டி ஆகிய பகுதிகளில் பூக்கள் பயிரிடப்பட்டு அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் மல்லிகை பூ, முல்லை பூ, கனகாம்பரம், செவ்வந்தி, சம்பங்கி வாடாமல்லி போன்ற பல்வேறு பூக்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களாகவே பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது. தற்பொழுது ஆவணி மாதம் கடைசி முகூர்த்தமும் இன்று ஓனம் பண்டிகை ஒட்டியும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. மேலும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை சேலம் கேரளா ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மொத்தம் 10 நாட்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பே ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஓணம் பண்டிகையில் வழிபாடு, அத்தப்பூ கோலம் ஆகியவற்றில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. இதற்காக திண்டுக்கல்லில் இருந்து கடந்த வாரத்தில் இருந்தே பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஓணம் பண்டிகைக்கு நேற்றும் இன்றும் பூக்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நேற்றைய தினம் 100 டன் பூக்கள் விற்பனை ஆகின. அதோடு பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலக்கோட்டையில் நேற்றைய தினம் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,300-க்கும், முல்லைப்பூ ரூ.450-க்கும், ஜாதிப்பூ ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.450-க்கும், பட்டன் ரோஸ் ரூ.250-க்கும், சாதாரண ரோஜா ரூ.150-க்கும் விற்றது. திண்டுக்கல், நிலக்கோட்டையில் நேற்று ஒரே நாளில் 170 டன் பூக்கள் விற்றது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சராசரி நாட்களில் மல்லிகைப்பூ 300 முதல் 400 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மல்லிகை பூ - 2000 முதல் 2700 வரை விற்கப்பட்டு வருகிறது . இதே போல்
முல்லை பூ - 7000
கனகாம்பரம் - 1800 முதல்.,
ஜாதிப் பூ - 500
செவ்வந்தி - 180
வாடாமல்லி - 80
கோழி கொண்டை - 70
செண்டு மல்லி - 90
ரோஸ் - 200 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இன்றுஓணம் பண்டிகைக்காக வாடாமல்லி ஆகிய பூக்கள் கேரள மாநிலத்திற்கு அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்பட்டது.