மேலும் அறிய

ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3 முதல் இன்பநிதி கலைஞர் தொலைக்காட்சியில் பணி புரிய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் முக ஸ்டாலினின் பேரனும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி தாத்தா மற்றும் அப்பாவின் ரூட்டையே கையிலெடுத்துள்ளதாகவும், அதன் முதல் படியில் அடியெடுத்து வைத்து விட்டதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

முக ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலினும் கிருத்திகாவும் கடந்த 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இன்பநிதி தன்மயா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகனான இன்பநிதி சமீபத்தில் தான் லண்டனில்  நிதி நிர்வாகம் தொடர்பான தனது பட்டப்படிப்பை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி, முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வரிசையில் திமுகவின் அடுத்த அரசியல் வாரிசாக பார்க்கப்படும் இன்பநிதி, கடந்த சில மாதங்களாகவே கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் அப்பா உதயநிதி ஸ்டைலில் கட்சி சின்னம் பதித்த டிஷர்ட் அணிந்து பங்கேற்றார். அதன்பின் பொங்கல் சமயத்தில் மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியிலும் உதயநிதியுடன் கலந்து கொண்டார். 

இப்படி தற்போதே மகனை அரசியலுக்கு அறிமுகம் செய்ய தொடங்கி விட்டார் உதயநிதி என விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் தற்போது கல்லூரி படிப்பை முடித்த இன்பநிதி கலைஞர் டிவியின் நிர்வாக பிரிவில் பணிபுரிய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3 முதல் இன்பநிதி கலைஞர் தொலைக்காட்சியில் பணி புரிய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. காலை 11 மணி முதல் 5.30 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் தொலைக்காட்சியில் இன்பநிதி நிர்வாக பணிகள் குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

கலைஞர் குடும்பத்திற்கு சொந்தமான கலைஞர் டிவி மற்றும் முரசொலியின் நிர்வாக பொறுப்பில் ஸ்டாலின் முதல் உதயநிதி வரை பணி புரிந்துள்ளனர்.  மு.க.ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு முரசொலி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அதேபோல முரசொலி நிர்வாகத்தை கவனிக்கவே அழகிரி மதுரைக்கு அனுப்பப்பட்டார். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் முரசொலியின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி உள்ளார். அந்த வகையில் தான் இன்பநிதி கலைஞர் டிவி நிர்வாக பொறுப்பில் இணைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விரைவில் இன்பநிதியின் அரசியல் பிரவேசமும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Alert: அதிகனமழை அபாயம்.. 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - உங்க ஊருக்கும் இருக்கா?
Red Alert: அதிகனமழை அபாயம்.. 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - உங்க ஊருக்கும் இருக்கா?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
இது கூட்டணியா? குழப்ப அணியா? தேஜஸ்வி யாதவிற்கு வில்லனாக மாறும் கூட்டணி கட்சிகள்!
இது கூட்டணியா? குழப்ப அணியா? தேஜஸ்வி யாதவிற்கு வில்லனாக மாறும் கூட்டணி கட்சிகள்!
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... த.வெ.க.,வை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் !
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... த.வெ.க.,வை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேஜஸ்வி நேருக்கு நேர்! அடித்துக்கொள்ளும் RJD-காங்கிரஸ்!
ஆரம்பிக்கலாங்களா... 6 நாட்களுக்கு கனமழை! எந்தெந்த இடங்களுக்கு வார்னிங்
Trump warns Modi | பதிலடி கொடுத்த இந்தியா!
Children gift to Sanitation workers |தூய்மை பணியாளர்களுக்கு giftசிறுவர்கள் நெகிழ்ச்சி செயல்
Baijayant Panda Anbumani | கண்டிசன் போட்ட பாண்டாகறார் காட்டும் அன்புமணிபாமக Game Starts!25+1

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Alert: அதிகனமழை அபாயம்.. 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - உங்க ஊருக்கும் இருக்கா?
Red Alert: அதிகனமழை அபாயம்.. 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - உங்க ஊருக்கும் இருக்கா?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
இது கூட்டணியா? குழப்ப அணியா? தேஜஸ்வி யாதவிற்கு வில்லனாக மாறும் கூட்டணி கட்சிகள்!
இது கூட்டணியா? குழப்ப அணியா? தேஜஸ்வி யாதவிற்கு வில்லனாக மாறும் கூட்டணி கட்சிகள்!
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... த.வெ.க.,வை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் !
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... த.வெ.க.,வை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் !
E Scooter: சிங்கிள் சார்ஜில் 158 கி.மீட்டர்.. 1 லட்சம் பட்ஜெட்டில் இதுதான் டாப் 5 இ ஸ்கூட்டர்!
E Scooter: சிங்கிள் சார்ஜில் 158 கி.மீட்டர்.. 1 லட்சம் பட்ஜெட்டில் இதுதான் டாப் 5 இ ஸ்கூட்டர்!
Friends Rerelease : விஜய் சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் ரீரிலீஸ் தேதி அறிவிப்பு
Friends Rerelease : விஜய் சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் ரீரிலீஸ் தேதி அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகுது!
கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகுது!
பயிர் காப்பீடு: நவம்பர் 15-க்குள் காப்பீடு செய்து இழப்பீட்டைப் பெறுங்கள்!  விவசாயிகளுக்கு ஆட்சியரின் அழைப்பு
பயிர் காப்பீடு: நவம்பர் 15-க்குள் காப்பீடு செய்து இழப்பீட்டைப் பெறுங்கள்! விவசாயிகளுக்கு ஆட்சியரின் அழைப்பு
Embed widget