மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
அமைச்சர் மூர்த்தி தங்கக் கட்டிகளை அள்ளிக் கொடுத்தாலும், வெற்றி பெற முடியாது - செல்லூர் ராஜூ சவால் !
மேற்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி தங்கக் கட்டிகளை அள்ளிக் கொடுத்தாலும், திமுக வெற்றி பெற முடியாது - என செல்லூர் ராஜூ பேட்டி.

செல்லூர் ராஜூ
Source : whats app
மேற்கில் சூரியன் உதிக்காது, மேற்கில் சூரியன் மறையதான் செய்யும் - எனவும் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
அரசு நலத்திட்டங்கள் எனக் கூறி மேற்கு தொகுதியில் மக்களிடம் தி.மு.கவினர் அடையாள அட்டை உட்பட முழு விவரங்களையும் பெற்று வருகிறார்கள். என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில்.., "மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் அரசு ஊழியர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். ஆள் மாறாட்டத்தில் ஈடுபடும் திமுகவினர் பொதுமக்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்களை பெறுகின்றனர். ஆள் மாறாட்டத்தில் திமுகவினர் சட்டத்திற்கு புறம்பாக ஈடுபடுகிறார்கள். மேற்கு தொகுதி முழுவதுமாக இச்செயலில் ஈடுபடும் திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டது.
மேற்கில் சூரியன் மறைய தான் செய்யும்
இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்காக என கூறி மக்களிடம் அடையாள அட்டைகளை திமுகவினர் பெறுகிறார்கள். தனி மனிதனின் முழு விபரங்களை திமுகவினர் சேகரித்து வருகிறார்கள். திமுகவினர் மேற்கு தொகுதியில் டிப்பன் பாக்ஸ் கொடுத்து வருகிறார்கள். மக்களுக்கு ஹாட் பாக்ஸ் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். திமுகவினர் எதற்காக ஆவணங்களை பெறுகிறார்கள் என தெரியவில்லை. சோதனை அடிப்படையில் திமுகவினர் மேற்கு தொகுதியில் ஆவணங்களை பெறுகிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என பணியாற்றி வருகிறோம். மேற்கில் உதயசூரியன் உதிக்காது, மேற்கில் சூரியன் மறைய தான் செய்யும், மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி தங்கக் கட்டிகளை அள்ளி, அள்ளிக் கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது" என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
Advertisement
Advertisement





















