Dindigul Flower Market: சரிந்த மல்லிகை பூ விலை.. கிலோவிற்கு ரூ.300-க்கு விற்பனை.. விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் அதிர்ச்சி!
கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ கிலோ ரூ.600 வரையில் விற்பனை ஆனது. இதனால் பூவின் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.300-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ,பழனி, வேடசந்தூர் ,வடமதுரை, சாணார்பட்டி ,நத்தம், தொப்பம்பட்டி உட்பட பல இடங்களில் பூக்கள் விளைகிறது. பூக்களுக்கு காலம் என்பது இங்கு இல்லை. அனைத்து மாதங்களிலும் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பூக்களிலே பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட், சென்னை , மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நாள்தோறும் வரத்து, நிலவரத்தை பொறுத்து பூக்கள் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ கிலோ ரூ.600 வரையில் விற்பனை ஆனது. இதனால் பூவின் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.300-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில் திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ சீசன் தற்போது நிலவி வருகிறது. இதையொட்டி நாள்தோறும் அதிக அளவில் மல்லிகை பூக்கள் இங்கு விற்பனைக்கு வருகிறது. மேலும் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து மல்லிகை பூக்களை வியாபாரிகள் வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற காரணத்தால் நேற்று மட்டும் சுமார் 4 டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்கு வந்தது. இதுதவிர பெரிய அளவில் முகூர்த்தம், விசேஷங்கள் ஏதும் இல்லாததால் மல்லிகை பூக்கள் விற்பனை ஆகாமல் தேங்கியது. இதையொட்டி மல்லிகைப்பூ விலை வீழ்ச்சியடைந்தது என்றார். பூமார்க்கெட்டில் கிலோவிற்கு ஜாதிப்பூ ரூ.250, கனகாம்பரம், முல்லை தலா ரூ.200, அரளி, ரோஜா தலா ரூ.150, கோழிக்கொண்டை ரூ.80, சம்பங்கி ரூ.50-க்கு விற்பனை ஆனது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்