Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Suicide: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே குடும்பத்த்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
திருமங்கலம் பகுதியில் வசித்து வந்த மருத்துவர் பாலமுருகன் என்பவரது குடும்பம், சுமார் 5 கோடி ரூபாய் அளவிலான கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது மனைவி சுமதி, சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். 17 மற்றும் 19 வயதிலான இரண்டு மகன்களும் தனது பெற்றோருடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். தலைநகர் சென்னையில் கடன் தொல்லை தாங்க முடியாமல, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணையையும் மேற்கொண்டுள்ளனர். கந்துவட்டி தொல்லை ஏதேனும் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
கடன் விவகாரம்:
மருத்துவர் பாலமுருகன் கோல்டன் ஸ்கேன்ஸ் என்ற பெயரில் முதலில் ஒரு ஸ்கேன் செண்டரை தொடங்கியுள்ளார். தொடர்ந்து, மேலும் 3 கிளைகளையும் திறந்துள்ளார். இந்த தொழில் விரிவாகக்த்திற்காக தான் ரூ.5 கோடி கடன் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எதிர்பார்த்தபடி தொழில் லாபம் தராததால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் தான், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர்களது உடல் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)



















