மேலும் அறிய

Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 

Chennai AC Bus Pass: "சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், ஏசி பஸ்களிலும் பஸ் பாஸ் முறையை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது" 

Chennai Bus Pass: "சென்னையில் மாதம் 2000 ரூபாய் பஸ் பாஸ் முறையில், ஏசி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும், பயணம் மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய போக்குவரத்து துறை திட்டம்"

சென்னை மாநகரம் இந்தியாவில் மிக முக்கிய நகரமாக இருந்து வருகிறது. சென்னையில் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருப்பதால், சென்னையில் தொடர்ந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோன்று சென்னையில் புறநகர் பகுதிகளிலும், குடியேற்றம் அதிகரித்து வருகிறது.

சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவை - Chennai MTC Buses 

சென்னையை பொறுத்தவரை மிக முக்கிய போக்குவரத்து சேவையாக, சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகளில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வேலை நிமிர்த்தமாகவும், பள்ளி, கல்லூரிக்கும் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

மாநகரப் பேருந்து பஸ் பாஸ் முறை - chennai mtc bus pass

தினமும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்வதற்காக, தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த பஸ் பாஸ் முறை வரப் பிரசாதமாக இருந்து வருகிறது.

தற்போது சென்னை மாநகர பேருந்து கழகம் சார்பில், ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் மூலம், மாநகர ஏசி பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுமக்கள் கோரிக்கை 

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஏசி பேருந்துகளும், அதிகரிக்கப்பட்டு வருகிறது. தினமும் வேலைக்குச் செல்பவர்கள் சமீப காலமாக ஏசி பேருந்துகளில், செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். 

பிற மாநகர பேருந்துகளுக்கு பஸ் பாஸ் வழங்குவதைப் போன்று ஏசி பேருந்துகளுக்கும், பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்‌. இதனை பரிசீலித்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம், ஏசி பேருந்துகளில் செல்ல பஸ் பாஸ் நடைமுறையை கொண்டு வர பரிசோதனை மேற்கொண்டது. 

ஏசி பஸ்ஸிலும் பஸ் பாஸ் முறை- AC Bus Pass 

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னையில் மாதம் 2000 ரூபாய் பஸ் பாஸ் முறை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பஸ் பாஸ் மூலம் ஏசி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும், பயணம் மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய போக்குவரத்து துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

பயன்பாட்டிற்கு வருவது எப்போது? 

ஏசி பேருந்துகளிலும் பயணம் செய்யும் பஸ் பாஸ்களை வருகின்ற, ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி ; அறுவை சிகிச்சைக்குப் பின் கல்லூரி மாணவி பரிதாப மரணம்
அதிர்ச்சி ; அறுவை சிகிச்சைக்குப் பின் கல்லூரி மாணவி பரிதாப மரணம்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget