Top 10 News Headlines: டெல்லி விரையும் எடப்பாடி, சனிப்பெயர்ச்சி இல்லை, பயங்கர நிலநடுக்கம் - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today Mar 25: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

எடப்பாடி திடீர் டெல்லி பயணம்..
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம். பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், இதுதொடர்பாக அக்கட்சி தலைவர்கள் சிலரை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓட்டுனர் சஸ்பெண்ட்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டையில் தேர்வு எழுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜ் பணியிடை நீக்கம். அவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் உறுதி. பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் செல்லவே, மாணவி பேருந்து பின்னால் நீண்ட தூரம் ஓடிய காட்சி வெளியான நிலையில் கடும் நடவடிக்கை
சனிப்பெயர்ச்சி இல்லை
'வாக்கிய பஞ்சாங்க' முறைப்படி 2026-ல் தான் சனிப் பெயர்ச்சி நடைபெறும் என திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு! வரும் 29ல் சனிப் பெயர்ச்சி நடைபெறுவதாக தகவல் பரவி வந்ததையடுத்து விளக்கம்
”தமிழர்களின் மருத்துவ ஏடுகளை களவாட சூழ்ச்சி”
"தமிழர்களின் மருத்துவ அறிவுக் களஞ்சியமான சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவற்றை, ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் இணைத்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழ் மருத்துவ ஏடுகளை களவாடும் வடக்கத்திய கும்பலின் சூழ்ச்சியை புரிந்து, அதனை ஒன்றுபட்டுப் பாதுகாப்பது, எதிர்வினையாற்றுவது நமது கடமையாக கொள்ள வேண்டும்" -கவிஞரும் சித்த மருத்துவருமான குட்டி ரேவதி காட்டம்
எம்டிஎம்-ஐ கடத்திய தாய் மற்றும் மகன் கைது
தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான வாளையாரில், பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குக் கடத்தி வரப்பட்ட உயிர் கொல்லி போதைப் பொருளான எம்டிஎம் என்ற போதைப் பொருளுடன் தாய் மற்றும் மகன் கைது. கேரளாவில் போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுக்கும் விதமாக, கேரள-தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதிகளில் போதை தடுப்பு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காதலர்களுக்கு 80 வயதில் திருமணம்
குஜராத்தில் 64 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொண்ட காதலர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்! 1961ல் பெற்றோர்கள் காதலை ஏற்காததால் ஹர்ஷ், முர்து தம்பதி வீட்டை விட்டுச் சென்று வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது இதை அறிந்த பேரன், பேத்தியினர் இவர்களின் 64வது திருமண நாளை ஒட்டி, மீண்டும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துவைத்து மகிழ்வித்தனர்.
புல்லட் ரயில் பணியின்போது விபத்து.. 25 ரயில்கள் ரத்து
குஜராத்: அகமதாபாத் அருகே வத்வா பகுதியில் புல்லட் ரயில் தட பணியின் டுபாது, ரெடிமேடு பாலத்தை மேலே உயர்த்தும் ராட்சத பளுத்தூக்கி சரிந்து கீழே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து விபத்து. நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் இத்தடத்தில் இயக்கப்படும் 25 ரயிலகள் ரத்து, பல்வேறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தின் தென்மேற்கு பகுதியில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிவர்டன் நகரத்தில் இருந்து தென்மேற்கே 170 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவே மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்
காதலியை தேடும் சீனப் பேராசிரியர்
சீனாவில் ஆண்டுக்கு ரூ.1.16 கோடி சம்பாதிக்கும் பேராசிரியர் லூ (35), தனக்கு காதலியாக வரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என வைத்துள்ள நிபந்தனைகள் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அப்பெண் தன்னை விட 10 வயது குறைவாகவும், ஒல்லியாகவும், அழகாகவும் இருக்க வேண்டும், 165 -171 செ.மீ உயரத்தில் இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனாவின் டாப் 9 பல்கலை.களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் - இன்றைய போட்டி
ஐபிஎல் தொடரின் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் நடப்பு தொடரில் இது முதல் போட்டியாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

