(Source: ECI/ABP News/ABP Majha)
‘முகாந்திரம் உள்ளது’ - கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளியின் மகள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம்
மனுதாரர் குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதால், வனத்துறையினர் மீது சம்பத்தப்பட்ட பிரிவில் வழக்கு பிரிவுகளை மாற்றி பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தேனி மாவட்ட வனத்துறையினர் சுட்டு கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் மரணத்திற்கு நீதி கேட்டு மகள் தொடர்ந்த வழக்கு. மனுதாரர் குற்றசாட்டில் முகாந்திரம் உள்ளதால், வனத்துறையினர் மீது சம்பத்தப்பட்ட பிரிவில் வழக்கு பிரிவுகளை மாற்றி பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. இந்த வழக்கை தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் வழக்கின் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம், குள்ளப்படகவண்டன்பட்டியைச் சேர்ந்த ஈ.வினோதினி தாக்கல் செய்த மனு..,”எனது தந்தை ஈஸ்வரன் தோட்டத்தில் விவசாய கூலி தொழில் செய்து வந்தார். அப்பகுதியில் வனக்காவலராக பணி புரிந்த திருமுருகன், பிச்சை ஆகியோர் எனது தந்தையை வனப்பகுதிக்குள் மரக்கன்றுகள் நடுவதற்கும், பிற பணிகள் புரிவதற்காகவும் அழைத்து செல்வர். இதனால் எனது தந்தைக்கு வனசரகர் முரளிதரன், கப்புவாமடை பீட் காப்பாளர் ஜார்ஜ் வன காப்பாளர் பிரபு வேட்டைத் தடுப்பு காவலர்களான சுமன், ஈஸ்வரன், கார்த்திக், சந்தனக்குமாருடன் அறிமுகம் ஏற்பட்டது. இச்சூழலில் வனத்துறையினரின் செயல்பாடு மீது அதிருப்தி ஏற்பட்டதால், எனது தந்தை வனப்பகுதிக்குள் வேலைக்கு செல்வதை நிறுத்தி கொண்டார்.
- Crime: திருடிய நகை, பணத்தை நூதன முறையில் மீட்ட மக்கள்; மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் நெகிழ்ச்சி
இதில் ஆத்திரமடைந்த வனகாவலர் திருமுருகன் உள்ளிட்டோர் கடந்த 29.10.23 அன்று தோட்டத்தில் வேலை செய்த எனது தந்தையை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். எனது தந்தை வனத்துறையினரை தாக்கியதால், தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது தந்தையை திட்டமிட்டு சுட்டுக் கொலை செய்த வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வாழ்வாதரத்திற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மேஜிஸ்திரேட் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை படித்து பார்த்த நீதிபதி வழக்கு விசாரணையில் மனுதாரர் குற்றசாட்டில் முகாந்திரம் உள்ளதால், வனத்துறையினர் மீது சம்பத்தப்பட்ட பிரிவில் வழக்கை மாற்றி பதிவு செய்ய காவல்துறைக்கு உத்திரவிட்டு, இந்த வழக்கை தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் வழக்கின் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.