மேலும் அறிய

டி.ஆர்.பாலுக்கு எதிராக கொதித்து எழுந்த youtuber.. தந்தைக்கு குடைச்சல் கொடுத்தாரா திமுக பிரமுகர்?

தனது மகன் யூடியூபில் பேசியதற்காக சொந்த கட்சி நிர்வாகி என்றும் பாராமல் தினந்தோறும் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

ஜப்பான் தமிழ் பிரதர்ஸ்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்லப்பெருமாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவர் ஸ்ரீபெரும்புதூர் 2 வது வார்டின் திமுக அவைதலைவராக இருந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என 2 பிள்ளைகள் உள்ளனர். இவரது மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் நாட்டில் உள்ள கார் தொழிற்சாலையில் பணி செய்து வருகிறார். இது தவிர ஜப்பான் தமிழ் பிரதர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் ஜப்பான், இந்தியா, தமிழ்நாடு என முக்கிய தகவல்களை யூடியூபில் பகிர்ந்து வருகிறார்.
 
" திரும்பவும் நிக்கிறார்னு தெரியல " 

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மீண்டும் டி.ஆர் பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் சிவராமகிருஷ்ணன் தனது ஜப்பான் தமிழ் பிரதர்ஸ் யூடியூபில் கடந்த 6 ஆம் தேதி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் டி. ஆர் பாலு என்ன கிழிச்சிட்டார்னு திரும்பவும் நிக்கிறார்னு தெரியல ஸ்ரீபெரும்புதூரில் நிறைய பிரச்சினை இருக்கு, வேலைவாய்ப்பு இருக்குதே தவிர மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை, ஒரு பார்க் கூட இல்லை.

டி.ஆர்.பாலுக்கு எதிராக கொதித்து எழுந்த youtuber.. தந்தைக்கு குடைச்சல் கொடுத்தாரா திமுக பிரமுகர்?
 
சாலை அமைக்க இந்த நிர்வாகத்திற்கு துப்பு உள்ளதா, 10 வருடங்களாக ஸ்ரீபெரும்புதூரில் பல கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அது முடிந்தால் பல் இளிக்கும் என்றும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறுவதால் ஸ்ரீபெரும்புதூரில் மேம்பாலம் வேண்டும் என கேட்டும் இதுவரை கட்டப்படவில்லை, புழுதி பறந்தும், சுகாதாரம் கெட்டு தெருவுக்கு 2 பேர் புற்றுநோயாலும், சிறுநீரக பிரச்சனையால் டயாலிசிஸ்ம் செய்து வருகின்றனர். மக்களுக்கு எந்த நல்லதும் செய்யாத டி.ஆர் பாலு எதற்கு நிற்கிறார் என கேள்வி எழுப்பி இருந்தார்.

டி.ஆர் பாலுவுக்காக வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

இந்த ரீல்ஸ் வீடியோ ஸ்ரீபெரும்புதூர் மக்களால் அதிகம் பகிரப்பட்டு, அதிக பார்வைகளை பெற்றது . மேலும் இந்த வீடியோ குறித்து ஸ்ரீபெரும்புதூர் பேருராட்சி தலைவி சாந்தியின் கணவரும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக செயலாளருமான சதிஷ் காதுகளுக்கு சென்றுள்ளது. இது பற்றி எதுவும் தெரியாத சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கம் திமுக துண்டு அணிந்து டி.ஆர் பாலுவுக்காக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

தினந்தோறும் தொல்லை

திமுக பேரூராட்சி செயலாளர் மறுநாள் முதல் தொடர்ந்து ராமலிங்கத்திற்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது ராமலிங்கம் புதியதாக வீடு கட்டி வரும் நிலையில் அந்த வீட்டுக்கு வீட்டு வரி, குழாய் வரி, பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கிறார். தான் கட்டிவரும் வீட்டிற்கு ஏற்கனவே வரி செலுத்திய நிலையில், மீண்டும் வரி கட்ட வேண்டும் என்றும், அடிக்கடி மின்சாரத்தை துண்டிக்க செய்வதாகும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

டி.ஆர்.பாலுக்கு எதிராக கொதித்து எழுந்த youtuber.. தந்தைக்கு குடைச்சல் கொடுத்தாரா திமுக பிரமுகர்?
 
தனது மகன் யூடியூபில் பேசியதற்காக சொந்த கட்சி நிர்வாகி என்றும் பாராமல் தினந்தோறும் தொல்லை கொடுத்து வரும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக செயலாளர் சதிஷ் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமலிங்கம் வேதனை தெரிவிக்கின்றார். தற்போது ராமலிங்கம் தனது மகன் சிவராமகிருஷ்ணனிடம் பேரூராட்சி திமுக செயலாளர் தன்னை தினந்தோறும் தொல்லை குடுத்து வருவதாக வீடியோ கால் மூலம் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது. 
 
இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில் , திமுக பேரூராட்சி செயலாளர் சதீஷிடம் தொடர்பு கொண்டு பேசினோம் : ராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர் தான், எங்களுடன் சேர்த்து திமுகவிற்கு வாக்கு சேகரித்தார். தேர்தல் நாளன்று கூட என்னை நேரில் சந்தித்து திமுக துண்டு வேண்டும் என கேட்டார். ஆனால் இப்பொழுது திடீரென இப்படி ஏன் பேசுகிறார் என தெரியவில்லை. அவரை தேர்தலுக்குப் பிறகு பார்க்கவில்லை, அவருக்கு எந்தவித மிரட்டலும் கொடுக்கவில்லை அது எங்களுக்கு தேவையும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget