Womens Reservation Bill: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர ஏன் காலதாமதம்..? விவாதத்தின்போது கனிமொழி எம்.பி கேள்வி..
இந்தியாவிலேயே முதல்முறையாக நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்.
புதிய நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, இன்று அதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ”இந்தியாவிலேயே முதல்முறையாக நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நாட்டிலேயே முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1996ல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா திமுக ஆதரவுடன் கொண்டு வரப்பட்டது. பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மகளிருக்கான இட ஒதுக்கீடு ஷரத்துகளை முறைப்படுத்த வேண்டும். எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் ஆலோசிக்காமல் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர ஏன் இவ்வளவு காலதாமதம்? ” என உரையாற்றி வருகிறார்.
தொடர்ந்து, மசோதாவில் வந்தனம் என்ற வார்த்தை உள்ளது. வந்தனம் என்றால் சல்யூட் என்றும், பெண்களை சல்யூட் அடிக்க யாரும் தேவையில்லை என்றும், பெண்களை சமமாக நடத்தினால் போதும் என்றும் கனிமொழி கூறினார். வலிமையான மற்றும் வலிமையான பெண்ணை ஏன் அடிமைத்தனமாகவும், ஏன் காளி தேவியை அவமதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது குறித்து நானே பலமுறை குரல் எழுப்பியுள்ளேன். இந்திய வரலாற்றில் பல சக்திவாய்ந்த பெண் தலைவர்கள் இருப்பதாகவும், அந்த பட்டியலில் இந்திரா காந்தி, ஜெயலலிதா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இருப்பதாகவும் அவர் கூறினார். அதிமுக தலைவர் ஜெயலலிதாவும் சக்தி வாய்ந்த தலைவர் என்று கனிமொழி கூறியபோது, பாஜக உறுப்பினர்கள் அவையில் ஹிந்தியில் கூச்சலிட்டனர்.
அப்போது திமுக எம்.பி. கனிமொழி, பாஜக உறுப்பினர்கள் கூச்சலிடதையடுத்து ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது என தெரிவித்தார்.
எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பிறகு இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அரசியலமைப்புச் சட்டம் பரிந்துரைக்கிறது, ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை, மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே எல்லை நிர்ணயம் செய்தால் அநீதி இழைக்கப்படும் என்று அவர் கூறினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏன் ரகசியமாக கொண்டு வரப்பட்டது என்று கேட்டார். அமைச்சர்களுடன் கூட்டங்களை நடத்தாமல், யாரிடமும் சொல்லாமல், திடீரென நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுகளை நடத்துவதில் என்ன அவசரம் என்று கேட்டார்.
#WATCH | Women's Reservation Bill | DMK MP Kanimozhi says, "I myself have raised this issue of bringing the Reservation Bill many times in Parliament. To many of my starred and unstarred questions, the Govt's reply was very consistent. They said that they have to involve all… pic.twitter.com/8gAJzAbopa
— ANI (@ANI) September 20, 2023
2010 ஆம் ஆண்டு UPA அரசாங்கம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியபோது ராஜ்யசபாவில் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசியதாகவும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, லோக்சபாவில் இப்போது அதே மசோதாவைப் பற்றி பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாரதியாரின் வரிகளை குறிப்பிட்ட கனிமொழி, “ பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்றார்.
முன்னதாக, நேற்று இதுகுறித்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகுதான் செயல்படுத்துபோன் என்று சொல்வது கண்துடைப்பு போல் உள்ளது.
வெறுமனே அறிவிக்கப்பட்டு பின்னர் தேர்தலில் இதை பயன்படுத்தி ஓட்டு வாங்கி விடலாம் என்றே நினைக்கிறர்கள். எனவே, மகளிர் இடஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தும் விதமாக மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை வரும் வரை காத்திருக்கக்கூடாது” என தெரிவித்தார்.