Morning Headlines: இன்றுடன் ஓய்கிறது பரப்புரை.. தியானத்தை தொடங்கும் பிரதமர் மோடி.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines May 30: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தலைப்புச் செய்திகளின் தொகுப்பாக காணலாம். முக்கியமான செய்திகளின் லிங்க்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- இன்றுடன் ஓய்கிறது கடைசி கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை - தீவிர வாக்குசேகரிப்பு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச், சேர்ந்த 57 தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில், ஏற்கனவே 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், 90 சதவிகித தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜுன் 1ம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அது நிறைவடைந்ததும், 7 கட்டங்களாக பதிவான வாக்குகளும், மொத்தமாக ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. மேலும் படிக்க..
- கன்னியாகுமரியில் கடல் நடுவே இன்று முதல் மோடி தியானம் - உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
கன்னியாகுமரியில் கடல் நடுவே பிரதமர் மோடி இன்று முதல் தியானத்தில் ஈடுபட உள்ளார். பொதுத்தேர்தல் நடைபெறும் ஒவ்வொருமுறையும் புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று, தியானத்தில் ஈடுபடுவதை மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார். முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையிலும், 2019-ம் ஆண்டு இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் தியானம் மேற்கொண்டார். அவ்வகையில் நடப்பாண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடையும் நிலையில், இந்த முறையும் தியானம் செய்ய முடிவு செய்துள்ளார். மேலும் படிக்க..
- ”படம் வரலன்னா காந்தியை யாருக்கும் தெரியாது” - மோடியின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்
திரைப்படம் மூலமாக தான் மகாத்மா காந்தி பற்றி சர்வதேச மக்கள் தெரிந்து கொண்டதாக, மோடி பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேசத் தந்தையைப் பற்றிய திரைப்படம் எடுக்கப்படுவதற்கு முன்பு வரை, உலக அளவில் மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்கும் தெரியாது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை புறக்கணித்ததாகவும், காந்தியின் பாரம்பரியத்தை மேம்படுத்தவில்லை என்றும், தனக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களை குற்றம் சாட்டினார். மேலும் படிக்க..
- முன்கூட்டியே கேரளாவை எட்டிய பருவமழை.. கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பொதுமக்கள்..!
கொளுத்தும் வெயிலில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பாதி பகுதிகள் பருவமழைக்காக காத்திருக்கும்போது, கேரளாவில் தற்போது அதிகனமழை அதிக இடங்களில் பெய்து வருகிறது. கேரளாவில் இம்முறை பருவமழை முன்கூட்டியே பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் ஏற்கனவே கனமழை பெய்ததால் வெள்ளத்தால் மக்கள் தவித்து வருகின்றனர். கேரளாவை பொறுத்தவரை எப்போது தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதிக்கு மேல்தான் ஆரம்பிக்கும். இந்தமுறை 3-4 நாட்களுக்கு முன்பே கனமழை பெய்து வருகிறது. மேலும் படிக்க..
- “பேச்சை சர்ச்சையாக்க வேண்டாம்..சமாளிக்க முடியல” - கவிஞர் வைரமுத்து ஓபன் டாக்!
என் பாட்டில் இருந்த பல வார்த்தைகள் படத்தின் தலைப்புகளாக வைப்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். அறிமுக இயக்குநர் காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “வேட்டைக்காரி”. இந்த படத்தின் கதையை கேட்டதும் கவிஞர் வைரமுத்து தான் டைட்டிலை பரிந்துரைத்துள்ளார். வேட்டைக்காரி படத்தில் ராகுல், சஞ்சனா சிங், வின்செண்ட் அசோகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.கே.ராம்ஜி இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரித்துள்ளார். மேலும் படிக்க..