”திருப்பதி கோயிலுக்கு மேலே விமானங்கள் பறக்க கூடாது” தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு சொன்னது என்ன?
Tirupati Temple: ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோயிலின் மேலே விமானங்கள் பறக்க அனுமதிக்க கூடாது என தேவஸ்தானம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பதி திருமலை கோயிலில் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றும், இதனால் கோயிலின் மேலே விமானங்கள் பறக்க அனுமதிக்க கூடாது என்றும், திருப்பதி தேவஸ்தானம் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் கடிதம்:
திருப்பதி கோயிலுக்கு மேல், விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு, மத்திய அரசுக்கு திருமலை தேவஸ்தானம் கடிதம் எழுதியுள்ளது. இந்திய அளவில் மட்டுமன்றி , உலக அளவிலும் பிரசித்தி பெற்ற கோயிலாக ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரர் சுவாமி கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு அதிக அளவில் சொத்துக்கள் இருப்பதாலும், அதிக அளவில் பக்தர்களிடம் இருந்து காணிக்கை வருவதாலும், பணக்கார கோயில் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருப்பதி திருமலை கோயில் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
TTD Chairman Sri BR Naidu urged Union Aviation Minister Sri Kinjarapu Rammohan Naidu to declare Tirumala a no-fly zone, citing Agama Shastra, temple sanctity, safety & devotee sentiments.#Tirumala #NoFlyZone #TTD #Sanctity #Devotion#Wesupportttd #DontBelieveRumors pic.twitter.com/kqmQbUA7mj
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) March 1, 2025
விமானங்கள் பறக்க கூடாது:
இது தொடர்பாக திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் பி.ஆர். நாயுடு , ஆந்திராவைச் சேர்ந்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள ராம் மோகன் நாயுடுவிடம் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது , “ ஆகம விதிகளின்படி , கோயிலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும். கோயிலின் சுற்றுச்சூழலுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது. திருப்பதி கோயிலின் மேலே பறக்கும் விமானங்களால் அதிக சத்தமானது, கோயிலின் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. ஆகையால், திருப்பதி திருமலை கோயிலின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதி கோயில் மேலே விமானங்கள் பறக்க கூடாது என ஆதரிப்பவர்கள் கூறுகையில், “ ஆகம விதிகளின்படி, கோயிலின் உயரத்திற்கு அதிகமாக கட்டடங்கள் இருக்க கூடாது. இதனால்தான் கோயில்களின் மேலே, விமானங்கள் பறக்க கூடாது. ஆகம விதிகளில் விமானங்கள் மேலே பறக்க கூடாது என்று கூறவில்லை என்றாலும், இதை அனுமதிக்க கூடாது என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு விளக்கம்:

இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்ததாவது , “ இந்தியாவில் எந்த கோயில்களிலும் விமானங்கள் பறக்க கூடாது என்ற தடை விதிக்கப்படவில்லை. ஆனால், பல தரப்பிடம் இருந்து சில கோயில்களின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வருகின்றன. இந்நிலையில், திருப்பதி கோயிலின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியாது. இதற்கு மாறாக, வான் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி , வேறு பாதையில் பறப்பது குறித்து ஆலோசிப்போம் என ராம் மோகன் ராவ் தெரிவித்துள்ளார்.





















