IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Champions Trophy 2025 Final: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

IND Vs Nz Champions Trophy 2025 Final: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகின்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல்:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் வென்று மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை வெல்ல இந்திய அணியும், இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டுகின்றன. இதனால், இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமின்றி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நேரலை ஒளிபரப்பு
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும். தொலைக்காட்சிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்தியா Vs நியூசிலாந்து:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சர்வதேச ஒருநாள் போட்டியில் இதுவரை 119 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 61 போட்டிகளிலும், நியூசிலாந்து 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிய, 7 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. அண்மைக்காலமாக ஐசிசி போட்டிகளில் இந்திய அணிக்கு, நியூசிலாந்து அணி கடும் நெருக்கடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு, கடந்த 200ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிபோட்டியில் இந்தியாவை வீழ்த்தி, நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது நினைவுகூறத்தக்கது.
மைதானம் & வானிலை எப்படி?
இறுதிப்போட்டிக்கான மைதானம் மெதுவானதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, சுழற்பந்துவீச்சாளர்கள் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் திணறக்கூடும். இதனால், முதலில் பேட்டிங் செய்யும் 250+ ரன்களை சேர்த்தால், எதிரணிக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
இன்றைய போட்டியில் மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மழையால் போட்டி பாதிக்கப்பட்டாலும், ஐசிசி விதிகளின்படி ரிசர்வ் டே மூலம் நாளை போட்டி நடபெறும்.
ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா?
- 1983- கபில்தேவ் தலைமையில் ஐசிசியின் ஒருநாள் கோப்பை
- 2007 - தோனி தலைமையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை
- 2011 - தோனி தலைமையில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை
- 2013 - தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி
- 2024 - ரோகித் தலைமையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை
அந்த வரிசையில் இன்றைய சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று, 6வது ஐசிசி கோப்பையை கைப்பற்றி ரச்கர்களை குஷிபடுத்துமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ரோகித் கிரீடத்தில் மற்றொரு மகுடம்?
ஐசிசி போட்டிகளில் நான்கு விதமான தொடர்களில் ஒரு அணியை இறுதிப்போட்டிக்கு வழிநடத்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ஏற்கனவே ரோகித் சர்மா பெற்றுள்ளார். இந்நிலையில் இன்றைய போட்டியில் 79 ரன்களை எடுத்தால், துபாய் சர்வதேச மைதானத்தில் 500 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். அதோடு, இன்றைய வெற்றியே ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கீ.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி.
நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (வி.கீ.), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ'ரூர்க்.




















