Mookuthi Amman - 2: ‘மூக்குத்தி அம்மன் -2 பட ஷூட்டிங்; விரதம் இருக்கும் நயன்தாரா- வைரல் வீடியோ!
Mookuthi Amman - 2: மூக்குத்தி அம்மன் -2 திரைப்படத்தின் பூஜை விழா புகைப்படங்கள், வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் -2’ திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. நடிகைகள் நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்ற பட பூஜை வீடியோ வைரல் ஆகியுள்ளது.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தயாரித்து இயக்கிய ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். 2020- ல் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. ஊர்வசி, ஆர்.ஜெ. பாலாஜி நடிப்பும் ரசிகர்களை ரசிக்க வைத்ததாக இருந்தது.
The smile that stole all our hearts left right and Center ♥️ #Nayanthara is all set to begin her journey for #MookuthiAmman2 pic.twitter.com/9qFgNSJwh2
— Vels Film International (@VelsFilmIntl) March 6, 2025
மூக்குத்தி அம்மன் -2
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சிமேக்ஸ், ஐ.வி. ஓய் என்டர்டெய்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் -2 பாகம். இதில் நயன்தாரா நடிக்கிறார். மார்ச்-15ம் தேதி முதல் ஹூட்டிங் தொடங்குகிறது. பிரசாத் லேபில் பிரம்மாண்ட் செட் அமைகக்ப்பட்டுள்ளது. படத்திற்கான பூஜை நடைப்பெற்றது. குஷ்பு, நடிகர் ஜெயம் ரவி, மீனா, சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.
#MookuthiAmman2 Pooja 🔱#SundarC - #Nayanthara ReginaCassandra - Khushbu Meena🌟
— Tharani ᖇᵗк (@iam_Tharani) March 6, 2025
pic.twitter.com/BuRot500Fw





















