Morning Headlines: தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்.. பவன் கல்யாண் கொடுத்த அரசியல் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய செய்திகள்..!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- ஸ்கெட்ச் ஆந்திராவுக்கு இல்ல தெலங்கானாவுக்கு.. காய் நகர்த்திய பவன் கல்யாண் - செம்ம ட்விஸ்ட்
ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, அம்மாநில அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புது கட்சி தொடங்கினார். இதனால், இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது. மேலும் படிக்க..
- 'புல்வாமா தாக்குதலை மோடி அரசியலுக்காக பயன்படுத்தினார்' - ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்!
புல்வாமா தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் நிலைமை, அதானி மற்றும் அரசியலில் தனது ஆரம்ப கால பயணம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து, ராகுல் காந்தியுடன் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை சந்தித்த வீடியோவைப் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு அரசின் தவறே காரணம் என்று சத்யபால் மாலிக் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியுடனான பேட்டியிலும் அதையே மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க..
- நெருங்கும் தீபாவளி: நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் - எந்தெந்த வழித்தடத்தில்? குஷியில் பயணிகள்
தீபாவளி, சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கினாலே பண்டிகை காலம் தான். ஆயுதபூஜை, நவராத்திரி கொண்டாட்டம், தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் தான். பொங்கல் வரை இந்த பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் தொடரும். இதனால், சொந்த ஊர்களுக்கு மக்கள் அடிக்கடி பயணம் செய்து வருவது வழக்கம். இதனால், ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் லட்சக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் படிக்க..
- தங்க கதவு.. கருவறை.. பக்தர்களை பரவசப்படுத்தும் அயோத்தி ராமர் கோயில்
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். மேலும் படிக்க..
- "விவசாயிகளை வைத்து சிலர் அரசியல் செய்தனர்" யாரை சொல்கிறார் பிரதமர் மோடி?
உத்தர பிரதேசத்துக்கு பிறகு அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான மகாராஷ்டிராவில் தற்போது, பாஜக - சிவசேனா (உத்தவ் தாக்கரே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் படிக்க..
- மருது பாண்டியர்களின் நினைவு நாள்.. சிவகங்கையில் 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..
சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்கள் நினைவு நாள் கொண்டாடப்படும் நிலையில் இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு என நீண்ட, பெருமை வாய்ந்த வரலாறு உள்ளது. நாட்டிலேயே மிகவும் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். அதில் முக்கிய இடம் வகிப்பவர்கள் மருது சகோதரர்கள். சுதந்திர போராட்ட வரலாற்றில் மகத்தான பங்களிப்பு ஆற்றிய போதிலும், மருது பாண்டியர் சகோதரர்களான வல்ல மருது மற்றும் அவரது இளைய சகோதரர் சின்ன மருது ஆகியோர் இந்திய அளவில் அறியப்படாமல் உள்ளனர். மேலும் படிக்க..