Sivagangai School Leave: மருது பாண்டியர்களின் நினைவு நாள்.. சிவகங்கையில் 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..
மருது பாண்டியர்களின் நினைவு நாள் முன்னிட்டு இன்று சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
![Sivagangai School Leave: மருது பாண்டியர்களின் நினைவு நாள்.. சிவகங்கையில் 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. holiday has been given to schools and colleges in Sivagangai district today on the occasion of Maruthu Pandyas memorial day. Sivagangai School Leave: மருது பாண்டியர்களின் நினைவு நாள்.. சிவகங்கையில் 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/27/fd22e8624a165cfae22463baf8b021fc1698375167048589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்கள் நினைவு நாள் கொண்டாடப்படும் நிலையில் இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு என நீண்ட, பெருமை வாய்ந்த வரலாறு உள்ளது. நாட்டிலேயே மிகவும் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். அதில் முக்கிய இடம் வகிப்பவர்கள் மருது சகோதரர்கள். சுதந்திர போராட்ட வரலாற்றில் மகத்தான பங்களிப்பு ஆற்றிய போதிலும், மருது பாண்டியர் சகோதரர்களான வல்ல மருது மற்றும் அவரது இளைய சகோதரர் சின்ன மருது ஆகியோர் இந்திய அளவில் அறியப்படாமல் உள்ளனர். இவர்கள் சிவகங்கை முத்து வடுகரின் தளபதிகள் ஆவர்.
காளையார் கோயில் போரில் சிவகங்கையின் ஆட்சியாளர் கொல்லப்பட்ட பிறகு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணைக்கு கொண்டு வர இந்த இரண்டு சகோதரர்களும் உதவினார்கள். கூடுதலாக, அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போரை நடத்தினர். ஆங்கிலேய துருப்புக்களை துரத்தி அடித்தனர்.
ஆரம்ப காலனித்துவ காலத்தில் இந்தியாவில் கொரில்லா போர்முறையை நிறுவிய பெருமை, மருது சகோதரர்களை சேரும். சிவகங்கை சீமை என்ற பெயரில், இவர்களை போற்றும் வகையில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசு இவர்களை கௌரவிக்கும் வகையில் தபால் தலையையும் வெளியிட்டது. மலேசியாவின் கெடாவில் இவர்களுக்கு என ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருது பாண்டியர்கள் 222 வது நினைவு நாள் கொண்டாடப்படும் நிலையில், இன்று சிவகங்கை மாவட்டம் சிவ கங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மருது பாண்டியர்கள் நினைவு நாள் விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி (ம) குருபூஜையினையொட்டி 3 தினங்கள் மதுபானக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், “இன்று (27.10.2023) சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டும், 29.10.2023 மற்றும் 30.10.2023 இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி (ம) குருபூஜை தினவிழா முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் 27, 29, 30 ஆகிய 3 நாட்கள் FL1/FL2/FL3/FL3A/FL4A மற்றும் FL11 ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகம், படை வீரர் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும்.
இந்த 3 நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களும் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது” என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
TN Special Buses: திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்துக்கு போறீங்களா? குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)