Morning Headlines: மதுரை எய்ம்ஸ் டெண்டர்.. சந்திரயான் அப்டேட்.. இன்றைய காலை செய்திகள் இதோ..
Morning Headlines: இந்தியாவில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
Chandrayaan 3: நாடே உற்றுநோக்கும் சந்திரயான் 3.. விண்கலத்தில் இருந்து இன்று பிரிகிறது லேண்டர் கருவி விக்ரம்.. அடுத்து என்ன?
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. பின்பு அதன் புவிவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்த 5-ஆம் தேதி சந்திரனின் வட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் மேலும் படிக்க,
BJP Election Plan: 5 மாநில தேர்தல், களத்தில் 350 எம்.எல்.ஏக்கள்.. கருத்து கணிப்பு நடத்த பாஜக அதிரடி திட்டம்..
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே, 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது, மினி நாடாளுமன்ற தேர்தலாகவே முக்கிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கருதுகிறது. இதனால், இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள மேலும் படிக்க,
Madurai AIIMS: அப்பாடா.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான ஒப்பந்தம் கோரியது மத்திய அரசு..! செப்.18 வரை அனுமதி
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்பந்தம் கோரி, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக ஜிஎஸ்டி உடன் சேர்த்து 17 ஆயிரத்து 700 ரூபாய் வசூலிக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 33 மாதங்களில் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அறிக்கையின் படி, 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும், அதேநேரம், மருத்துவமனை முழுமையான பயன்பாட்டிற்கு வர 2028ம் ஆண்டு ஜுன் மாதம் வரை காலம் தேவைமேலும் படிக்க,
India China Talks: முடிவுக்கு வருகிறதா இந்திய, சீன எல்லை பிரச்னை? பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம்.. நடந்தது என்ன?
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அத்தமீறலின் உச்சக்கட்டமாக, கடந்த 2020ஆம் ஆண்டு, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் உயிரிழந்தனர். ஆனால், 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசுமேலும் படிக்க,
G20 Film Festival: பதேர் பாஞ்சாலி படத்துடன் துவங்குகிறது பிரமாண்டமான ஜி20 திரைப்பட திருவிழா..
நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி ஜி-20 திரைப்பட விழா தொடங்குகிறது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் இந்திய சினிமாவின் பிதாமகன் எனப்படும் சத்யஜித் ரேவின் திரைப்படமான 1955ஆம் ஆண்டு வெளியான ”பதேர் பாஞ்சாலி” திரைப்படம் மூலம் இந்த திரைப்பட விழாமேலும் படிக்க,
Court Judgment: தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட 9,423 நீதிமன்ற தீர்ப்புகள்.. பிரதமர் மோடி பாராட்டு
உச்ச நீதிமன்றம் இயங்க தொடங்கியதில் இருந்து, அனைத்து மொழிகளிலும் மக்கள் அணுகக்கூடிய வகையில் மொத்தம் 35,000 முக்கிய தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதே எங்கள் இலக்கு. இந்தியை தவிர, தீர்ப்புகள் இப்போது உச்ச நீதிமன்ற இணையதளத்தில் ஒரியா, குஜராத்தி, தமிழ், அசாமிஸ், காசி, கரோ, பஞ்சாபி, நேபாளி மற்றும் வங்கம் ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன. மேலும் பல மொழிகளும் இந்த பட்டியலில்மேலும் படிக்க,