Top 10 News Headlines: அதிமுக - பாஜக கூட்டணி மீது ஸ்டாலின் அட்டாக், குடியரசு தலைவருக்கு கெடு - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today April 12: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

அதிமுக - பாஜக கூட்டணி மீது ஸ்டாலின் அட்டாக்
“நீட் தேர்வை, இந்தித் திணிப்பை, மும்மொழிக் கொள்கையை, வக்பு சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அதிமுக. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அதிமுக. இவை எல்லாம் இவர்களது குறைந்த செயல்திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. அதிமுகவை பேசவும் அனுமதிக்கவில்லை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டமான 10 மசோதாக்கள்:
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, 10 மசோதாக்களும் சட்டமாக அமலானதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு. மாநில அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18 நவ. 2023 தேதியில், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என தெரிவிப்பு
தவெக பூத் கமிட்டி மாநாடு
கோயம்புத்தூரில் மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா மண்டலம் என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல். பூத் கமிட்டி மாநாடு முடிந்தபின் தங்கள் கட்சியின் முழு பலம் அனைவருக்கும் தெரியவரும் என விஜய் ஏற்கனவே ரிவித்திருந்தார்
ரூ.4.8 கோடி மதிப்பிலான போலி நகைகள் பறிமுதல்
கடலூர்: பண்ருட்டியில் பிரபல நகைக்கடையில் BIS HUID முத்திரை இல்லாமல் ரூ.4.8 கோடி மதிப்பிலான போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி ஹால்மார்க் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்த 5.4 கிலோவுக்கு அதிகமான நகைகள் பறிமுதல்
குடியரசு தலைவருக்கு கெடு
வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வழக்கில், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம். ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு
பிரதமர் மோடி மகிழ்ச்சி
"தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி. மாமனிதர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதி செய்வோம். வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்"-X தளத்தில் தமிழில் பதிவிட்ட பிரதமர் மோடி
"ராணாவை நாடு கடத்தும் முயற்சி 2009ல் தொடங்கியது"
”மும்பை குற்றவாளி தஹாவூர் ராணாவை நாடு கடத்தும் நடவடிக்கை 2009ல் தொடங்கியது; அமெரிக்க உளவுத்துறை ராணாவை அடையாளம் கண்டபோது 2011ல் இது வேகமெடுத்தது. நீண்ட, கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, தற்போது ராணாவை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர்; அப்போதைய அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய்க்கு முக்கிய பங்குண்டு” - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
அமெரிக்க துணை அதிபர் இந்தியா வருகை
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் வருகிற 21ம் தேதி இந்தியா வருகை என தகவல். வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்
இன்றைய ஐபிஎல் போட்டி
வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
தோனி சொல்வது என்ன?
கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு CSK கேப்டன் தோனி பேசுகையில், “கடந்த சில போட்டிகள் எதுவுமே எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்தப் போட்டியில் நாங்கள் போதுமான ரன்கள் சேர்க்கவில்லை. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. எங்களிடம் நல்ல தொடக்க வீரர்கள் உள்ளனர். ஸ்கோரை பார்த்து விரக்தி அடையாமல் இருப்பது மிகவும் முக்கியம். மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

