தாய், தந்தையை டிராக்டர் ஏற்றி கொலை செய்த மகன்! என்ன காரணம்?
சொத்துக்காக தாய் தந்தையை மகன் டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக தாய் தந்தையை மகன் டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்பலநாயுடு. இவரது மனைவி ஜெயம்மா. இந்த தம்பதிக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கு சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது.
இந்த நிலத்தை மகன் ராஜசேகர் விற்க விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.
இதனால் பெற்றோருக்கும் மகனுக்குமிடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது. அதன்படி நேற்றும் பிரச்சினை வந்துள்ளது.
ராஜசேகர் டிராக்டரை கொண்டு அந்த நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதையறிந்த அவரின் பெற்றோர் அப்பலநாயுடு மற்றும் ஜெயம்மா ராஜசேகரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது இரு தரப்புக்குமிடையே கடும் வாக்குவாதமாகியுள்ளது. பேசி பேசி பிரச்சினை வளர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகன் டிராக்டரில் ஏறி ஓட்ட முயற்சித்தார். அதற்கு பெற்றோர் குறுக்கே நின்று முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
கோபத்தில் ராஜசேகர் பெற்றோர் என்றும் பாராமல் அவர்கள் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் திகைத்து போனார்கள். இதையடுத்து ராஜசேகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜசேகர் பெற்றோரை டிராக்டர் ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய ராஜசேகரை தேடி வருகின்றனர்.





















