Breaking LIVE: தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு 26 மார்ச் அன்று மறைமுகத் தேர்தல் கூட்டம்
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 128-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு 26 மார்ச் அன்று மறைமுகத் தேர்தல் கூட்டம்
பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு 26 மார்ச் அன்று மறைமுகத் தேர்தல் கூட்டம்
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அசத்தல் வெற்றி
மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில், இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது இந்திய அணி. 317 இலக்கு நிர்ணயித்திருந்தது இந்திய அணி. சேஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 162 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக்கி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது.
PF Update: பி.எப். வட்டியில் அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு! ஷாக்கில் தொழிலாளர்கள்!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப் மீதான வட்டி சதவீதம் 8. 50 லிருந்து 8. 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதிலும் கடந்த சில ஆண்டுகளாக பி.எப் மீதான வட்டி குறைக்கப்படவில்லை. இந்தநிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சாதி, ,மத மோதல்களை ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை : முதலமைச்சர் முக ஸ்டாலின்
சமூக வலைத்தளங்கள் மூலம் சாதி, ,மத மோதல்களை ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் ஆட்சியமைக்க கோரியது ஆம் ஆத்மி கட்சி
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது ஆம் அத்மி கட்சி. இந்நிலையில், பஞ்சாபில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து உரிமை கோரினார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான்