Breaking LIVE: வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு - தமிழக அரசு
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு, இன்று முதல் 3 நாட்கள் தலைமை செயலகத்தில் நடக்கிறது.
இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு - தமிழக அரசு
வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உள்ளூர் தொழில்நுட்பம், புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு, ஏற்றுமதியில் சிறந்துவிளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
பாடம் கற்போம்; மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் - ராகுல்காந்தி
5 மாநில தேர்தல் தொடர்பாக ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆணை வென்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக எனது நன்றி. இதிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
Humbly accept the people’s verdict. Best wishes to those who have won the mandate.
— Rahul Gandhi (@RahulGandhi) March 10, 2022
My gratitude to all Congress workers and volunteers for their hard work and dedication.
We will learn from this and keep working for the interests of the people of India.
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிர்ப்புகளை மீறி கடலூரில் வெளியான எதற்கும் துணிந்தவன் - திரையரங்குகளில் போலீஸ் குவிப்பு
பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளில் காலை நான்கு மணி அளவில் திரையிடப்படும் முதல் ரசிகர் ஷோ இன்றி ஏழு மணிக்கு பிறகு திரைப்படம் முதல் காட்சி திரையிடப்பட்டது
தடுமாறும் தலைமை.. உட்கட்சி பூசல்.. ஆளும் எண்ணிக்கை இரண்டு! நொறுங்கும் காங்கிரஸ்.!
இந்தியாவில் மிகவும் பழமையான கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சி, இன்று நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்து மீண்டும் ஒரு அடி சறுக்கியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி இன்று தனது ஆட்சியை இழந்தது மூலம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3 லிருந்து 2 ஆக குறைந்துள்ளது.