மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணி நேர முக்கிய நிகழ்வுகளின் மொத்த தொகுப்பு.. காலை தலைப்பு செய்திகளாய் உங்களுக்காக!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் ஊக்கத்தொகை - 1ம் தேதி முதல் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
- தமிழ்நாட்டில் வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா? - இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
- காங்கிரசை கூட்டணியில் இருந்து நீக்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிக்க தயார் - சீமான் பேட்டி
- மதுரையில் ரயில் தீப்பிடித்து எரிந்து 9 பேர் பலியான விவகாரம் - சுற்றுலா குழுவுடன் வந்த சமையல்காரர் உட்பட 5 பேர் கைது
- சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க வேண்டும் - கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
- சென்னையில் இடி, மின்னலுடன் அதிகாலை முதல் பெய்த கனமழை - சாலையின் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்
- தூத்துக்குடியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை படுகொலை - மகள்கள் மற்றும் காதலன் உட்பட 4 பேர் கைது
- வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் - பக்தர்கள் குவிய தொடங்கியதால் விழாக்கோலம்
இந்தியா:
- ஓணம் பண்டிகை நாடு முழுவதும் வழக்கம்போல் கோலாகலமாக கொண்டாட்டம் - அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து
- ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி - ஜி20 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
- புதிய குற்றவியல் மசோதாக்கள் நிறைவேறிய பிறகு 2 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நீடிக்காது - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
- நாடாளுமன்ற பொதுத்தேர்தல் டிசம்பர் மாதமே நடைபெற வாய்ப்பு உள்ளது - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு
- சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்படும் - பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தகவல்
- சுயமரியாதை திருமணங்களை வழக்கறிஞர்களும் நடத்தி வைக்கலாம் - உச்சநீதிமன்றம் அனுமதி
- ஏர் ஃபைபர் சேவையை தொடங்குவதுடன் ஏ.ஐ துறையில் புதிய புரட்சி செய்யப்படும் - ரிலையன்ஸ் குழும ஆண்டுக்கூட்டத்தில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு
- நிலவின் மேற்பரப்பில் பள்ளத்தை உணர்ந்து பயண வழியை மாற்றிய பிரக்யான் ரோவர் - இஸ்ரோ தகவல்
உலகம்:
- இந்தோனேசியாவின் பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் - ர்க்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் இல்லை - சினா அறிவிப்பு
- இங்கிலாந்தில் தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு
- தைவான் நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஃபாக்ஸ்கான் நிறுவனர்
- ஆப்கானிஸ்தானில் தேசிய பூங்காங்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை
விளையாட்டு:
- ஆசிய பெண்கள் 5 பேர் ஹாக்கி - மலேசியாவை வீழ்த்தி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது இந்தியா
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் அணிகள் - 3 கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் - முதல் சுற்றில் ஸ்வியாடெக் எளிதில் வெற்றி, சக்காரி அதிர்ச்சி தோல்வி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion