மேலும் அறிய

ஐ.ஏ.எஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிசினஸை கையிலெடுத்த அதிகாரியின் கதை..!

பெற்றோரின் ஆசைக்காக ஐ.ஏ.எஸ் ஆன பாலகோபால், அப்பணியை ராஜினாமா செய்த பின்னர் உருவாக்கிய நிறுவனம் உலக அளவில் மிக முக்கிய நிறுவனமாக கோலோச்சி வருகிறது

தனது 30 வயதில் பாலகோபால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த 1983ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் இன்ஸ்டிடியுட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனம் இரத்த வங்கி சேவை பறிமாற்றங்களை எளிதாக்குவதற்காக உள்நாட்டில் ரத்த பைகளை  உருவாக்கி இருந்தது. அதனை அறிந்துகொள்ளச் சென்ற அவர், அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் தலைவராக இருந்த பேராசிரியர் ஏ.வி.ரமணியை சந்தித்தார். அவரிடம் உரையாடல் நடந்த சில மாதங்களுக்கு பிறகு ஐஏஎஸ் பொறுப்பை விட்டு வெளியேறி பின்னர் பென்போல் பாலிமர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தை தொடங்க காரணமாக இருந்தது. 

1999-ஆம் ஆண்டில் பென்போல் நிறுவனமும் ஜப்பானின் டெருமோ கார்ப்பரேஷன்னுடன் இணைந்து – இந்தியாவில் மிகப்பெரிய ரத்த பைகள் தயாரிப்பாளர்களாகவும் உலகின் உயர் தொழில்நுட்ப உயிரியல் மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.

ஐ.ஏ.எஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிசினஸை கையிலெடுத்த அதிகாரியின் கதை..!

பாலகோபாலின் இளமைப்பருவம்

கேரள மாநிலம் கொல்லத்தில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 1952-ஆம் ஆண்டில் பிறந்த பாலகோபால். தனது உறவினர் வீட்டில் வளர்ந்தார். தனது குழந்தை பருவத்தின் பெரும்பகுதியை வயநாடு மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் செலவழித்தார். அங்கு அவரது தந்தை மேலாளராக இருந்தார். லவ்டேலில் உள்ள லாரன்ஸ் உறைவிட பள்ளியில் பயின்ற அவர் சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் இங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் கேரள பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டமும் பெற்றார். 1976ஆம் ஆண்டில் தனது பிச்டி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தனது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

ஐ.ஏ.எஸ் பணி தொடக்கமும் முடிவும்

1977ஆம் ஆண்டில் மணிப்பூர் கேடர் பிரிவில் தமெங்லாங் மாவட்ட பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ராணுவ பயிற்சியின் போது மரணம் அடைந்த அவரது தம்பியின் மரணம் அவரின் மனதை வெகுவாக பாதித்தது. இதனையெடுத்து கேரள கேடருக்கு பணியிட மாற்றம் பெற்று சில காலம் கேரளாவில் பணியாற்றிய நிலையில் மீண்டும் மணிப்பூர் சென்றார். ஆனால் அப்போது அவரின் பெற்றோர்கள் உடல்நலிவுற்று இருந்தனர் அவரது மற்றொரு தம்பி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து ஐஏஎஸ் பணியை தொடர வேண்டுமா என்ற கேள்வி அவரின் மனதில் எழுந்தது.

இது குறித்து பாலகோபால் கூறும்போது, எனது தலைமுறையில் இருந்த பல இளைஞர்களைப் போலவே, எனக்கும் வாழ்க்கையின் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இல்லை. ஐ.ஏ.எஸ்ஸில் சேருவதற்கான எனது முடிவு பெற்றோரின் விருப்பத்தால் உந்தப்பட்டது என்றார். பேராசிரியர் ரமணியுடனான சந்திப்பு அதையெல்லாம் மாற்றியது. அவருக்கு இப்போது ஒரு நோக்கம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக, அவரது பெற்றோர் கூட ஐ.ஏ.எஸ்ஸை விட்டு வெளியேறி ஒரு புதிய முயற்சியைத் தொடங்குவதற்கான அவரது முடிவை ஆதரித்தனர். உண்மையில், இந்த புதிய முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்காக அவரது தந்தை தனது சேமிப்பை கூட வழங்கினார்.

’’பிழையின் மூலம் தொழிலை கற்றோம்’

ஐ.ஏ.எஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிசினஸை கையிலெடுத்த அதிகாரியின் கதை..!

ஒரு கோடி திட்ட செலவில் பென்போல் லிமிடெட் ரத்த பைகள் தயாரிக்கும் முதல் ஆலை 1987 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ரத்தபைகள் தயாரிப்பு குறித்து பாலகோபால் கூறும்போது, "தயாரிப்பு மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், உலகில் ஏன் இரத்தப் பைகள் தயாரிப்பாளர்கள் ஆறு பேர் மட்டுமே இருந்தார்கள் என்பதை நாங்கள் பின்னர் புரிந்துகொண்டோம். இது ஒரு கடினமான தயாரிப்பு. எல்லாவற்றையும் கடினமான வழியில் கற்றுக்கொண்டோம், ஏனெனில் தொழில்நுட்ப அறிவை உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எந்தவொரு கல்வியும் இல்லை, பதில்களைத் தேடுவதற்கு எங்களிடம் இணையம் இல்லை. சோதனை மற்றும் பிழை மூலம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, என்றார்.

உலக அளவில் சந்தை விரிவாக்கம் 

சர்வதேச தரத்தில் ஒரு தயாரிப்பை உருவாக்க நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன. 1993-94ஆம் ஆண்டுகள் வாக்கில், நிறுவனம் ஏற்றுமதி சந்தையில் நுழைந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், லேபிளிங், பேக்கேஜிங், குழாய்களின் நெகிழ்வுத்தன்மை போன்றவற்றில் தொடர்ச்சியான முன்னேற்ற கலாச்சாரத்தை அது உருவாக்கியது. 1991 இன் பொருளாதார தாராளமயமாக்கல் அவர்களின் வணிகத்திற்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்த போதிலும் அதனை தாண்டியும் அவர்களது நிறுவனம் வெற்றிநடை போட்டது.

ஐ.ஏ.எஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிசினஸை கையிலெடுத்த அதிகாரியின் கதை..!

திட்டதிட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு ஐஏஎஸ் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற பாலகோபாலின் முடிவுதான், அவரின் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை கண்டறிவதற்கான வாய்ப்பாக அமைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget