மேலும் அறிய

Mumtaz and Shahjahan | மும்தாஜை மூன்று முறை அடக்கம் செய்த ஷாஜஹான்.. வரலாறு சொல்வது என்ன?

1607ல் தான் அக்பரின் பேரன் ஷாஜஹான் தனது காதலியை முதன்முதலில் சந்தித்தார். அந்த நேரத்தில், அவர் முகலாயப் பேரரசாகப் பதவியேற்றிருக்கவில்லை.

தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான வெள்ளை-பளிங்கு கல்லறையாகும். இது முகலாயப்  பேரரசர் ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலுக்காக அமைக்கப்பட்டது. இந்தியாவின் ஆக்ராவிற்கு அருகில் யமுனை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் 22 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டு 1653ம் ஆண்டு பணி நிறைவடைந்தது.உலகின் புதிய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த நினைவுச்சின்னம், அதன் சமச்சீர், கட்டமைப்பு ஆகியவற்றால் பார்வையாளர்களை வியக்க வைக்கிறது. அழகு, சிக்கலான கையெழுத்து, பதிக்கப்பட்ட ரத்தினக் கற்கள் மற்றும் ரோஜாக்கள் நிரம்பிய தோட்டம் இதன் சிறப்பம்சமாகும். தாஜ்மஹால் தனது மனைவிக்கு ஷாஜஹான் எழுப்பிய நினைவுச் சின்னம் என்பதைவிட தனது சிநேகிதி உற்றதோழிக்கு எழுப்பிய நினைவுச்சின்னம் என்பதே பொருத்தமாக இருக்கும். 

1607ல் தான் அக்பரின் பேரன் ஷாஜஹான் தனது காதலியை முதன்முதலில் சந்தித்தார். அந்த நேரத்தில், அவர் முகலாயப் பேரரசாகப் பதவியேற்றிருக்கவில்லை.பதினாறு வயது இளவரசர் குர்ராம், அப்போது அழைக்கப்பட்டபடி, அரச வீதிகளைச் சுற்றித் திரிந்தார், சாவடிகளில் பணிபுரியும் உயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுடன் ஊர்சுற்றினார்.

இந்தச் சாவடிகளில் ஒன்றில்தான், இளவரசர் குர்ரம், 15 வயது இளம் பெண் அர்ஜுமந்த் பானு பேகத்தை சந்தித்தார், அவரது தந்தை விரைவில் பிரதமராக இருந்தார்.முதல் பார்வையில் காதலாக இருந்தாலும் இருவரும் உடனே திருமணம் செய்து கொள்ளவில்லை. இளவரசர் குர்ரம் முதலில் காந்தஹாரி பேகத்தை மணக்க வேண்டியிருந்தது. பின்னர் மூன்றாவது மனைவியையும் திருமணம் செய்து கொண்டார்.

மார்ச் 27, 1612 அன்று, இளவரசர் குர்ராம் மற்றும் அவரது காதலி அர்ஜுமந்துக்கு மும்தாஜ் மஹால் என்று பெயரிட்டார். மும்தாஜ் மஹால் அழகாகவும், புத்திசாலியாகவும், கனிவான இதயம் கொண்டவராகவும் இருந்தார். விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவும் பணமும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவர் விடாமுயற்சியுடன் உழைத்தார். இந்தத் தம்பதியருக்கு மொத்தம் 14 குழந்தைகள் இருந்தனர்.ஆனால் குழந்தைப்பருவம் கடந்து ஏழுபேர் மட்டுமே வாழ்ந்தனர். 

1631ல், ஷாஜகானின் ஆட்சியின் மூன்று ஆண்டுகளில் கான் ஜஹான் லோடி என்பவரால் கிளர்ச்சி உண்டானது. ஷாஜகான் தனது படையை ஆக்ராவிலிருந்து சுமார் 400 மைல் தொலைவில் உள்ள தக்காணத்திற்கு அழைத்துச் சென்றார். மும்தாஜ் மஹால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் ஷாஜஹானுடன் எல்லைக்குச் சென்றார். 

ஜூன் 16, 1631ல், முகாமில் உள்ள ஒரு அலங்கரிக்கப்பட்ட கூடாரத்தில் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். முதலில், ஆரோக்கியமாக இருந்தாலும் மும்தாஜ் பின்னர் உடல்நலம் குன்றி உயிரிழந்தார்.

ஷாஜஹானுக்குத் தன் மனைவியின் நிலை குறித்து தகவல் கிடைத்ததும், அவர் அவள் பக்கம் விரைந்தார். ஜூன் 17ம் தேதி அதிகாலையில், அவர்களின் மகள் பிறந்த ஒரு நாள் கழித்து, மும்தாஜ் மஹால் ஷாஜஹானின் கைகளில் இறந்தார். பர்பன்பூரில் உள்ள முகாம் அருகே இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி அவரது உடல் உடனே அடக்கம் செய்யப்பட்டாள். 

ஷாஜஹானின் வேதனையில், தனது கூடாரத்திற்குச் சென்று எட்டு நாட்கள் இடைவிடாமல் அழுதார் என்று அவரது அரசவையின் இனாயத் கான் என்பவரின் குறிப்புகள் கூறுகின்றன. கூடாரத்தில் இருந்து வெளியே வந்தபோது அவரது தலைமுடி முற்றிலுமாக நரைத்திருந்தது, அவரது கண் மங்கி கண்ணாடி அணியவேண்டிய சூழல் ஏற்பட்டது. 1631 டிசம்பரில், கான் ஜஹான் லோடியை வென்றதும், ஷாஜஹான் மும்தாஜ் மஹாலின் உடலை தோண்டி எடுத்து 435 மைல்கள் தொலைவில் ஆக்ராவிற்கு எடுத்துவந்தார். அவரது படை முழுவதும் மும்தாஜுக்கு மரியாதை செலுத்தியபடி வந்தது.

மும்தாஜ் மஹாலின் உடல் ஜனவரி 8, 1632ல் ஆக்ராவை அடைந்தபோது, ​ ராஜா ஜெய்சிங் நன்கொடையாக வழங்கிய நிலத்தில் தற்காலிகமாக புதைக்கப்பட்டது. இது தாஜ்மஹால் கட்டப்படும் இடத்திற்கு அருகில் இருந்தது.பின்னர் தனது மகனின் உதவியுடன் தாஜ்மஹாலைக் கட்டிமுடித்தார் ஷாஜஹான். தனது இறுதிக்காலத்தில் மும்தாஜ் கல்லறையைப் பார்த்தபடியே ஃபதேபூர் சிக்ரியில் இருந்தபடி ஷாஜஹான் இறந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget