Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Most Expensive ICE SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் விலையுயர்ந்த இன்ஜின் அடிப்படையிலான எஸ்யுவி கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Most Expensive ICE SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் விலையுயர்ந்த இன்ஜின் அடிப்படையிலான எஸ்யுவி கார்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
எஸ்யுவிக்களின் ஆதிக்கம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எண்ட்ரி லெவல் தொடங்கி, பிரீமியம் டாப் என்ட் வரையில் எஸ்ய்விக்களின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. மலிவான எஸ்யுவிக்கள் குறித்து ஏராளமான விவரங்களை நாம் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் மிக அதிக விலையை கொண்ட இன்ஜின் அடிப்படையிலான எஸ்யுவிக்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
5. லாம்போர்கினி உருஸ்
லாம்போர்கினி உருஸ் காரின் SE வேரியண்டானது இந்திய சந்தையில் ரூ.4.6 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பிளக் - இன் ஹைப்ரிட் எஸ்யுவி கார் மாடல் இதுவாகும். ஸ்போர்டி லுக்கை கொண்ட காரும் ஆகும். அக்ரெசிவ் லுக்கை கொண்ட பம்பர், 21-23 இன்ச் வீல் ஆப்ஷன்கள், கல்லார்டோ தாக்கத்தை கொண்ட டெயில் கேட் இதன் ஸ்போர்சியர் தனத்தை மேம்படுத்துகிறது.
கேபின் பற்றி பேசுகையில், 3டி ஸ்டைல் டேஷ்போர்ட் பேனல்ஸ், ஒலஃப்சன் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைந்த 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளன. லாம்போர்கினியின் மற்ற கார்களை போலவே, இதிலும் கஸ்டமைஸ் செய்துகொள்ள ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 4 லிட்டர் ட்வின் டர்போ V8 + ப்ளக் இன் ஹைப்ரிட் இன்ஜின் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 800 குதிரைகளின் சக்தியுடன், 950Nm என்ற இழுவைத்திறனை உற்பத்தி செய்யக்கூடியது ஆகும். அதிகபட்சமாக 312 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த கார், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.4 விநாடிகளில் எட்டிவிடும்.
4. ஆஸ்டன் மார்டின் DBX
ஆஸ்டன் மார்டின் DBX காRIN 707 வேரியண்டானது இந்திய சந்தையில் ரூ.5.5 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. காற்றோட்டத்தை அதிகரிக்கும் வகையில் பெரிய கிரில், சைட் ஸ்கர்ட்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 22 மற்றும் 23 இன்ச் ஆப்ஷன்களில் வீல்கள் வழங்கப்படுகின்றன. ஸ்போர்ட்டி லுக் மட்டும் இன்றி ஸ்டேண்டர்ட் ஸ்போர்ட்ஸ் சீட்களையும் கொண்டுள்ளன. இதில் உள்ள 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் ஆனது போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார்பிளே அல்ட்ரா கொண்ட ஒரு சில கார்களில் இதுவும் ஒன்றாகும். இதிலும் ஏராளமான கஸ்டமைசேஷன் ஆப்ஷனகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள 4 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜின் 9 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 707 குதிரைகளின் ஆற்றலை கொண்ட இந்த காரானது, 900Nm இழுவை திறனை உற்பத்தி செய்யக்கூடியது ஆகும். அதிகபட்சமாக 310 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த கார், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.3 விநாடிகளில் எட்டிவிடும்.
3. பெண்ட்லி பெண்டேகா EWB
பெண்ட்லி பெண்டேகா EWB கார் மாடலின் முல்லினர் வேரியண்டானது 5 ஆயிரத்து 305 மிமீ என்ற அதிகப்படியான வீல்பேஸை கொண்டுள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் ரூ.9 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெண்டேகா EWB-வின் மற்ற வேரியண்ட்களில் இருந்து தனித்து தெரிய இது, முல்லினர் ஸ்பெக் ஃப்ரண்ட் கிரில், ஏர் வெண்ட் மற்றும் 22 இன்ச் வீல்களை கொண்டுள்ளன. அதோடு, பெண்ட்லி லோகோவானது வீல்களின் மையப்படுத்தியில் வழங்கப்பட்டுள்ளது. வசதிகளுக்கு எந்தவித குறையும் இன்றி சொகுசு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த கார் மாடலாக திகழ்கிறது. இதில் இடம்பெற்றுள்ள 4 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜின் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 550 குதிரைகளின் ஆற்றலை கொண்ட இந்த காரானது, 770Nm இழுவை திறனை உற்பத்தி செய்யக்கூடியது ஆகும். அதிகபட்சமாக 290 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த கார், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 4.6 விநாடிகளில் எட்டிவிடும்.
2. ஃபெராரி ப்ரோசாங்கு
ஃபெராரி ப்ரோசாங்கு காரானது இந்திய சந்தையில் ரூ.10.5 கோடி என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் முன் மற்றும் பின்புறத்தில் 22 மற்றும் 23 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. GT ஸ்போர்ட்ஸ் காரை போன்ற உட்புற அம்சங்களை கொண்டுள்ளன. இந்த பிரிவில் நேட்சுரல் ஆஸ்பிரேடட் இன்ஜின் கொண்ட ஒரே கார் மாடல் என்ற பெருமையை இதனையே சாரும். இதில் இடம்பெற்றுள்ள 6.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் V12 இன்ஜின் 8DCT ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 725 குதிரைகளின் ஆற்றலை கொண்ட இந்த காரானது, 716Nm இழுவை திறனை உற்பத்தி செய்யக்கூடியது ஆகும். அதிகபட்சமாக 310 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த கார், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.3 விநாடிகளில் எட்டிவிடும்.
1.ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் விலையுயர்ந்த கார் மாடலான, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மாடலின் பிளாக் பேட்ஜ் வேரியண்ட் ரூ.11.92 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் வீல் பேஸ் 5355 மில்லி மீட்டராகும். 23 இன்ச் வீல்கள் கூட கருப்பு நிற டச்சை கொண்டுள்ளது. எவ்வளவு வேகத்திலும், எந்த ஒரு மேற்பரப்பிலும் இந்த காரின் இருக்கைகள் மிகவும் சொகுசானதாகவே உணரும். இதில் இடம்பெற்றுள்ள 6.75 லிட்டர் ட்வின் டர்போ V12 இன்ஜின் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 600 குதிரைகளின் ஆற்றலை கொண்ட இந்த காரானது, 900Nm இழுவை திறனை உற்பத்தி செய்யக்கூடியது ஆகும். அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த கார், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 5.1 விநாடிகளில் எட்டிவிடும்.





















