மேலும் அறிய
சிவகங்கை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.. நீதிமன்றத்திற்கு வந்த மனு
தனியார் பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு அதிகாரம் இல்லை - வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பட்டா நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட கோரி மனு தாக்கல். வனத்துறையின் பதிலை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. மனுதாரர் மாவட்ட ஆட்சியரை அணுகி நிவாரணம் பெறலாம் - நீதிபதிகள்.
யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி மனு
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பருவ மழையையே நம்பியே விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், நெடுங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அவரது விவசாய நிலத்தில் யூகலிப்டஸ் மரங்களை பயிரிட்டு வருகிறார். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று விடும். ஏற்கனவே வறட்சி மாவட்டமாக இருக்கும் சூழலில், இது மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும். யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே கண்ணன் என்பவரால் பயிரிடப்பட்டுள்ள யூகலிப்டஸ் மரங்கள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
நீதிபதிகள் உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மரியா கிளாட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனியார் பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு எந்த உரிமையும் இல்லை என என்பதை வழக்கறிஞர் சுட்டி காட்டினார். வனத்துறை தரப்பில் தெரிவித்த கருத்துகளை பதிவு செய்த நீதிபதிகள் ”இந்த வழக்கில் மனுதாரர் கேட்கும் தீர்வினை வனத்துறை தரப்பில் நிறைவேற்ற முடியாது. என்பதால், மனுதாரர் மாவட்ட ஆட்சியரை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















