மேலும் அறிய

மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் 'குயிலி' பட இசை வெளியீட்டில் தொல் திருமாவளவன்

மது ஒழிப்பு குறித்து உருவாகியிருக்கும் 'குயிலி ' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்

நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் 'குயிலி'

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். 

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில்

''சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 

இந்த கால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன். வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழி காட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பேசு பொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.  அண்ணன் ராஜன் பேசும்போது, 'தேசிய அளவில் மதுவை ஒழிக்க வேண்டும்' என்றும் , இது தொடர்பாக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்க கூடும் என்றும் குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான் மக்களவையில் இது குறித்து பேசி இருக்கிறேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது. 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனத்தை முன் வைத்தார். நாம் அதை கடந்து சிந்திக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள நம் தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக்கூடாது என்ற பரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்பு கொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.  

மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில் முக்கியமானது மதுவிலக்கு. மகாத்மாவை தேசத் தந்தை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சான கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே? 

இதனை மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல ஏனைய மாநில அரசுகளும் இதனை தங்களுடைய வருவாய்க்கான வழியாகத்தான் பார்க்கிறது. யார் கெட்டுப் போனால் என்ன ? என்ற அலட்சியப்போக்குத்தான் நீடிக்கிறது. இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்கு இருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். பல மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். 

இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப் பொருள்கள்..தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது.  இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டது. 

இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளைய தலைமுறையினரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள். குடும்பம் நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள். ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களை பராமரிக்கவும்... பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட ஆளுமையாக அவர்கள் இல்லை. நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிகாலையில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள். அவ்வளவு குடும்ப பாரத்தையும் மனைவி சுமக்கிறாள். அது எவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாக சென்று சந்தித்தால்தான் உணர முடியும். இந்த நாட்டை பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும் ஒன்று. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்த அவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிக இன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும் தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் த. ராமமூர்த்தி இப்பாடலை எழுதியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள். இந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் அரசியலை நுழைத்து மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை. 

தமிழக முதலமைச்சரிடத்தில் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசும் போது அவருக்கும் இது தொடர்பான கவலை இருக்கிறது.‌ ஆனால் இது ஒரு சமூக கட்டமைப்பு, சிஸ்டம். அரசு அரசு சார்ந்த கட்டமைப்புகள் சில தருணங்களில் நம்முடைய விருப்பங்களை மீறி இயங்கக் கூடியவையாக அமைந்து விடுகின்றன.‌ மக்களிடத்தில் பரந்துபட்ட அளவில் இதற்கான விழிப்புணர்வு தேவை. இன்று மதக் கலவரங்களும், வன்கொடுமைகளும் அதிகரிப்பதன் பின்னணியில் மதுவும் ஒரு காரணம் என்பதை நாம் காண முடிகிறது. 'குயிலி' படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல் விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல் தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். 

மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இது என்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும் உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.  மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது.‌ எனவே மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்,' என்றார். 

பாடலாசிரியர் வேட்டவலம் த. ராமமூர்த்தி பேசுகையில், ''நான் இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. மதுவால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு சில தருணங்களில் உண்மையை சொல்லலாம். அது அனைவருக்கும் பயன்படும்…நானும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு இப்படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்…மதுவை தொடாதீர்கள். தொட்டாலும் அதனை விட்டு விடுங்கள். அப்போதுதான் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும்,'' என்றார்.

 

 

***

 

தலைப்பு செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget