Accident: சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி.. ஆறாக ஓடிய 8 டன் சல்ப்யூரிக் ஆசிட்.. பெரும் பதற்றம்..!
மகாராஷ்ட்ராவில் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததால் 8 டன் அமிலம் சாலையில் கொட்டியதால் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளது தானே. பிரபலமான இந்த நகரத்தில் நுல்லா என்ற பகுதி அமைந்துள்ளது. நுல்லாவில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியே சரக்கு வாகனங்களும், பயணிகள் போக்குவரத்து வாகனங்களும் செல்வது வழக்கம்.
சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி:
இந்த நிலையில், இன்று நுல்லா பகுதியில் அந்த சாலையில் ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 8 டன் அமிலம் இருந்தது. இந்த நிலையில், மும்பையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், அந்த லாரி சாலையிலே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கர் லாரி கவிழ்ந்ததால் லாரியில் இருந்த 8 டன் சல்ப்யூரிக் அமிலமும் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. சாலையில் கொட்டி வழிந்தோடிய சல்ப்யூரிக் அமிலம் நுல்லா பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும் கலந்தது. நீர்நிலைகளில் சல்ப்யூரிக் அமிலம் கலந்ததால் அப்பகுதி முழுவதும் வித்தியாசமான வாசனை வீசத்தொடங்கியது.
சாலையில் கொட்டிய அமிலம்:
இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சல்ப்யூரிக் அமிலம் 8 டன் அளவு கொட்டியதால் சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு படையினர் வந்தனர். டேங்கர் லாரி கவிழ்ந்ததால் அந்த டேங்கர் லாரியை ஓட்டிச் சென்ற பிரிஜேஷ் சரோல் காயம் அடைந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதிர்ஷ்டவசமாக விபத்திற்குள்ளான பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பதால், மீட்பு படையினர் அமிலத்தை அப்புறப்படுத்தும் பணியில் எந்த சிரமும் இல்லை. அதேபோல, இதுவரை அமிலம் கொட்டியதால் உடல்நலம் பாதிப்பு என்று எந்த புகாரும் பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததற்கு காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டேங்கர் லாரி விபத்திற்குள்ளானதால் 8 டன் அமிலம் கொட்டிய சம்பவம் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கும், அந்த அமிலம் நீர்நிலைகளில் கலந்ததால் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அமிலம் கலந்த தண்ணீரை மக்கள் யாரும் பயன்படுத்தாதவாறும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: இந்துவாக இருக்க பெருமைப்படுகிறேன்" கொட்டும் மழையிலும் கோயிலை சுற்றிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
மேலும் படிக்க: G20 Summit: முடிந்தது ஜி20 மாநாடு..! ஆனால், மீண்டும் நவம்பரில் ஜி20 கூட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு