தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
அரசு வெளியிட்ட தகவலின்படி, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 29, 2025-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை: தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் நீண்ட காலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 2,000 உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
அரசு வெளியிட்ட தகவலின்படி, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 29, 2025-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். தேர்வின் தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள், மாநிலத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தப் பணியிடங்கள் நிரம்புவதன் மூலம் வங்கி சேவைகள் மேலும் விரிவடையும் என்றும், வேலைவாய்ப்பு தேடி வரும் பல இளைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிக்க விரும்புவோர், கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தகுதி பெற்றவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
இந்த நடவடிக்கை, மாநில அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சிகளில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. அரசு, அனைவரும் காலக்கெடு முடிவதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29 ஆகஸ்ட் 2025
விண்ணப்பிக்க வேண்டிய இணையத்தளம்: http://www.drbkpm.in
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கே.நந்தகுமார் ஏற்கெனவே அறிவித்திருந்த சுற்றரிக்கையில்
கூட்டுறவு வங்கிகள், அனைத்து வகையான மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் (பணியாளர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டக சாலைகள் தவிர) நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய உதவியாளர் காலி பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அந்த வகையில், கீழ்க்கண்ட காலவரையறையை பின்பற்றி பணி நியமன பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக நாளிதழ்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பணி நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற அவற்றை பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். செப்டம்பர் 12 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்று, அக்டோபர் 27 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். நவம்பர் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15 ஆம் தேதி வெளியிட வேண்டும். வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது






















