மேலும் அறிய

210 கிலோ கஞ்சா மூட்டைகளுடன் சிக்கிய 2 வாலிபர்கள்... இலங்கைக்கு கடத்த முயற்சியா?

கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில் இன்று காலை திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 210 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்ட கடலோர பகுதியிலிருந்து இலங்கைகக்கு கஞ்சா கடத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதை கண்காணித்து போலீசார் தடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில் இன்று காலை திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசுக் காரை  போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் தலா 2 கிலோ எடையுள்ள 105 கஞ்சா பொட்டலங்கள் 7 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

210 கிலோ கஞ்சா மூட்டைகளுடன் சிக்கிய 2 வாலிபர்கள்... இலங்கைக்கு கடத்த முயற்சியா?

இதையடுத்து கஞ்சா மூட்டைகளுடன் காரை பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் காரில் வந்த 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஜோதிங்கநல்லூர் சுந்தரம் என்பவரின் மகன் சீனிவாச பெருமாள் (25), திருநெல்வேலி மாவட்டம், திருமலைகொழுந்தபுரம் ஆறுமுகம் என்பவரின் மகன் முத்துமாலை (21) என்பது தெரிய வந்தது.

மேலும் போலீசார் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பாலா என்ற நபர் கொடுத்த இந்த மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். இந்த மூட்டைகளை கட்டையங்காடு பகுதியில் வந்து ஒருவர் பெற்றுக் கொள்வார். ஆனால் போலீசாரின் வாகனச் சோதனையில் தாங்கள் சிக்கிக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கஞ்சா மூட்டைகள் சென்னையில் இருந்து திருச்சி - புதுக்கோட்டை வழியாக பட்டுக்கோட்டை பகுதிக்கு கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. கஞ்சா மூட்டைகளை இங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் திருச்சிற்றம்பலம் வந்து கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த சீனிவாசபெருமாள், முத்துமாலை இருவரையும் கைது செய்தனர். மேலும் காரும், கஞ்சா மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சிகள் நடந்து வருகிறது. போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு இதை தடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget