Headlines | பிரதமர் மோடி அமெரிக்கா பயணம், சென்னையில் கனமழை .. மேலும் சில முக்கியச் செய்திகள்
News Headlines Today in Tamil: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய முக்கிய செய்திகள் சில...
![Headlines | பிரதமர் மோடி அமெரிக்கா பயணம், சென்னையில் கனமழை .. மேலும் சில முக்கியச் செய்திகள் Tamil Nadu News Headlines TN Local Body Elections Covid Headlines News in tamil Headlines | பிரதமர் மோடி அமெரிக்கா பயணம், சென்னையில் கனமழை .. மேலும் சில முக்கியச் செய்திகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/22/82737f72b308a521520e07a06ccdaa5c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Tamil News Headlines Today:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.
ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல வுள்ளார்.
தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
https://tamil.abplive.com/business/petrol-under-gst-why-is-the-minister-ptr-backed-today-18128
புதுச்சேரி மாநிலங்களவை வேட்பாளராக பிஜேபி -யின் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து, இம்மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக்குப் பின்னர், முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட இடங்கள் மற்றும் தொகுதிகள் கிடைக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இருந்தாலும், நல்ல இணக்கமான முறையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது ஆறுதலை அளிக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில், விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட இருக்கும் 90 சதவீத இடங்கள் முடிவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
‛கேட்டது கிடைக்கவில்லை... ஆனாலும் ஓகே’ திருமாவளவன் சோகம்!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 43,938 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,27,15,105 பேர் குணமடைந்துள்ளனர்.தற்போது, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 3,18,181 ஆக உள்ளது.
கோவளம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், “கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறுசான்றினாலும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று கூறியுள்ளார்.
சட்டவிரோத குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வசூலிப்பது தொடர்பாக மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,647 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 16,993 ஆக உள்ளது. கொரோனா தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.02% குணமடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)