Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
HBO Harry Potter Cast: ஹாரிபாட்டர் வெப் சீரிஸில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள, நடிகர்களின் விவரங்களை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

HBO Harry Potter Cast: திரைப்படங்களாக வெளியாகி மெகா ஹிட் அடித்த ஹாரிபாட்டர் புத்தகம், எச்பிஒ தளத்திற்காக தற்போது சீரிஸாக உருவாக்கப்பட்டு வருகிறது.
ஹாரிபாட்டர் திரைப்படங்கள்:
ஜே.கே. ரவுலிங் எழுதிய ஹாரிபாட்டர் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு, வார்னர் ப்ரோஸ் நிறுவனம் 8 படங்களை தயாரித்து வெளியிட்டது. ஃபேண்டசி கதைக்களமாக சிறுவர்களை கவரும் விதமான மாயஜால உலகத்தை நிகழ்வதாக வெளியான இந்த படங்கள் ஒட்டுமொத்தமாக, உலகளவில் 7.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக வாரிக்குவித்தவது. பிரதான கதாபாத்திரங்களான ஹாரி பாட்டர், ஹெர்மாய்னி கிரேஞ்சர் மற்றும் ரான் வீஸ்லி கதாபாத்திரங்களில் நடித்த, டேனியல் ரேடிக்ளிஃப் மற்றும் ருபெர்ட் கிரிண்ட் ஆகியோர் அந்த கதாபத்திரங்களாகவே வாழ்ந்து ரசிகர்களை கவர்ந்து இழுந்தனர். 90ஸ் கிட்ஸ்களின் நிஜ நாயகர்களாகவே அவர்கள் போற்றப்பட்டனர். இந்நிலையில் ஹாரிபாட்டர் கதை, எச்பிஒ தளத்திற்காக சீரிஸாக உருவாக்கப்படுகிறது. இதில் பிரதான மூன்று கதாபத்திரங்களில் நடிக்க, 3 சிறுவர்கள் புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
யார் இந்த புதிய ஹாரிபாட்டர்?
ஹாரிபாட்டர் புத்தகத்தின் கடைசி பாகமான கர்ஸ்ட் சைல்ட் திரைப்படம் வேண்டும் என ரசிகர்க கோரி வந்த நிலையில், அதற்கு மாற்றாக HBO தளத்தில் சீரிஸாக ஹாரிபாட்டர் ரீபூட் செய்யப்படுகிறது. இதில் ஹாரிபாட்டராக நடிக்க டாமினிக் மெக்லக்லின், ஹெர்மாய்னி கிரேஞ்சர் கதாபாத்திரத்தில் நடிக்க அரபெல்லா ஸ்டாண்டன் மற்றும் ரான் வீஸ்லி கதாபாத்திரத்தில் நடிக்க அலஸ்டர் ஸ்டவுட் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. அதோடு, மூன்று பேரும் சேர்ந்து இருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “மிஸ்டர். பாட்டர், மிஸ்.கிரேன்ஜர் மற்றும் மிஸ்டர். வீஸ்லி: ஹாக்வார்ட்ஸ் மாயாஜால மற்றும் மந்திரவாதி பள்ளியில் உங்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
ஹாரிபாட்டர் சீரிஸ் - வெளியீடு எப்போது?
30 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரை ஆடிஷன் செய்த பிறகு தான், இந்த மூவரை பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரிஸிக்கான கதையை கார்டினர் என்பவர் எழுதி, ஷோ ரன்னராகவும் செயல்பட உள்ளார். ஹாரிபாட்டர் புத்தகத்தை எழுதிய கே.கே. ரவுலிங் உட்பட நான்கு பேர் எக்சிகியூடிவ் ப்ரொடியுசராக செயல்பட உள்ளனர். இந்த சீரிஸிற்கான படப்பிடிப்பு அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் சீசன் வெளியாகும் என கூறப்படும் நிலையில், மொத்தம் 7 சீசன்களை வெளியிட எச்பிஒ தரப்பு திட்டமிட்டுள்ளது.
ஹாக்வர்ட் மாயாஜால பள்ளி:
ஹாக்வர்ட் எனப்படும் மாயாஜால பள்ளியில் படிக்கச் செல்லும் ஹாரிபாட்டரின் பின்புலம் என்ன, அவருக்கும் அந்த பள்ளிக்கும் உள்ள தொடர்பு? லார்ட் வால்டர்மோட் ஏன் ஹாரிபாட்டரை கொல்ல துடிக்கிறார் என்பதை மையப்படுத்தியே ஹாரிபாட்டர் கதை அமைந்து இருக்கும். இதனை சுவாரஸ்யமாக்கும் விதமாக பறக்கும் கார், டிராகன், மாயாஜல துடைப்பம், கண்ணுக்கு தெரியாத மிருகம், வித்தியாசமான மந்திர வார்த்தைகள், குதிரை மனிதன், குள்ள மனிதர்கள், ஆசைகளை காட்டும் கண்ணாடி, ஃபீனிக்ஸ் பறவை, வீடியோக்கள் அடங்கிய செய்தித்தாள், மந்திரவாதிகள் அமைச்சரவை என ஏராளமான அம்சங்கள் படம் முழுவதும் நிறைந்து இருக்கும். படமாக ரசிகர்களின் மறக்கமுடியாத நினைவுகளாக உள்ள ஹாரிபாட்டர், சீரிஸ் ஆக கவனம் ஈர்க்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.




















