மேலும் அறிய

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

Coimbatore News: கோவை உப்பிலைபாளையம் பகுதியில் 20 டன் எல்பிஜி வாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

கோவை அவிநாசி மேம்பாலத்தில் 20 மெட்ரிக் டன் எல்பிஜி 3 ஏற்றிச் சென்ற டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எரிவாயு கசி ஏற்பட்ட நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

டேங்கர் லாரி விபத்து:

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை கணபதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்துக்கு சொந்தமான எல்பிஜி பாட்டில் ஆலைக்கு 18 டன் எல்பிஜி ஏற்றிக்கொண்டு டேங்கர் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் அவினாசி மேம்பாலத்தில் சென்ற போது டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் மீடகப்பட்டார். 

வாயு கசிவு:

லாரி கவிழ்ந்தவுடன் டேங்கரில் இருந்து எரிவாயு கசிந்தால், அருகில் உள்ள மக்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம். இதில் உள்ள ஆபத்தை உணர்ந்த அதிகாரிகள்,மேம்பாலத்தை மூடிவிட்டு, வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பிவைத்தனர்.

வெளியேற்றப்பட்ட மக்கள்:

மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து 1 கிமீ சுற்றளவில் உள்ள மக்களையும் அதிகாரிகல் வெளியேற்றியுள்ளனர். மேம்பாலத்தில் மின்கம்பிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி டேங்கரை பாதுகாப்பாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

மேலும், குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர்  ​​"நள்ளிரவு 3 மணிக்கு மேல் இந்தச் சம்பவம் நடந்தது. 18 மெட்ரிக் டன் எல்பிஜி ஏற்றிச் சென்ற  டேங்கர் கவிழ்ந்ததுள்ள்து. கசிவு சரி செய்யப்பட்டு, வாகனம் வந்து சரி செய்ய காத்திருக்கிறோம். இணைப்புத் தகடு முடிந்ததும், வாகனத்தை மீண்டும் நிமிர்ந்து திருப்ப முடியும்... .மேலும் போக்குவரத்தும் தடைச்செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்திருந்தார்

தூக்கிநிறுத்தப்பட்ட டேங்கர்:

இந்த நிலையில் எட்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று கிரேன்களின் உதவியுடன் டேங்கர் லாரியானது தூக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.டேங்கரை தூக்கி நிறுத்துவதற்கு முன்பாக தீயணைப்பு துறையினர் அந்த இடம் முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர்.  இதன் பிறகே மிகுந்த கவனமுடன் டேங்கரானது தூக்கி நிறுத்தப்பட்டது. 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget