Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 6 லட்சத்து 20 ஆயிரத்து 91 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் பொங்கல் தொகுப்பிற்கு டோக்கன் வினியோகத்தை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி அமலாக்கதுறையினர் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்வது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.
பொங்கல் பண்டிகையையொட்டி நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்பு ஆகிய அடங்கிய பொருட்கள் தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வினியோகம் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 6 லட்சத்து 20 ஆயிரத்து 91 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்குவதை விழுப்புரம் நகர பகுதியான ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள நியாய விலைக்கடையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி டோக்கன் வினியோகத்தை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி...
இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கப்படுமெனவும் அதில் குறிப்பிட்ட தேதிகளான 9,10, 11, 12, ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விடுபட்டவரக்ள் 13 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என பொன்முடி கூறினார். அமைச்சர் துரை முருகன் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை செய்வது தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அதற்கு பதில் அளிக்காமல் மறுத்து சென்றார்.
இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிடப்படும் நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், நாள்தோறும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் இன்று (ஜனவரி 3-ந்தேதி) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட உள்ளது
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்றிலிருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமும் காலையில் 100 பேர் மாலை 100 பேர்
அவர்கள் வழங்கும் டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர் பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.