FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்
எதிர்க்கட்சியாக ஆக்டிவ் பாலிடிக்ஸில் இறங்க வேண்டிய அதிமுக சுறுசுறுப்பின்றி செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது ’’யார் அந்த சார்?’’ போராட்டம் மூலம் அதிமுக back to track என சொல்ல வைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. அதிமுக மீண்டும் ஃபார்முக்கு வர ஓர் முக்கியப்புள்ளி தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும். குறிப்பாக ஜெயலலிதா கருணாநிதி காலங்கள் கிட்டத்தட்ட போருக்கு நிகரான ஒரு போட்டி இருந்து வந்தது. ஆனால் இருவரின் மறைவுக்கு பின்னர் சற்று மந்தமான அரசியல் சூழலே இங்கு நிலவி வருகிறது. குறிப்பாக அதிமுக ஜெயலலிதா மறைவால் கடும் பாதிப்புக்குள்ளானது. அடுத்த முதல்வர் யார்? பொதுச்செயலாளர் யார்? சின்னம் யாருக்கு? என கட்சிக்குள்ளே பல உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டு கட்சியே துண்டு துண்டாக சிதைந்து போனது. இந்நிலையில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்ற பெயர் வரக்கூடாது என்றால் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். ஆக தேர்தல் பொறுப்பை சரியான கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்த ஈபிஎஸ்,பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 தேர்தலில் திமுகவுக்கு ஐபேக் தான் வேலை செய்தது நான் தான் கூட்டி வந்தேன் என ஆதவ் அர்ஜுனா பலமுறை பேசியிருந்தார்.
இந்நிலையில் திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற முடிவோடு சுற்றிவரும் ஆதவ் விசிகவில் இருந்து விலகிய நிலையில் அவர் அதிமுகவுடன் இணைவார் எனவும் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் மூலமாகவே ஈபிஎஸ் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக அளவுக்கு கூட அதிமுக குரல் கொடுப்பதில்லை என பேச்சுக்கள் எழுந்தது அதிமுக தூங்கிக்கொண்டிருக்கிறது ஆக்டிவ் அரசியலில் இல்லை என்ற விமர்சனம் எழுந்து வந்தது. ஆனால் தற்போது அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை விவகாரத்தில் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவில் யார் அந்த சார் போராட்டத்தை அதிமுக முன்னெடுத்தது.
அதிமுகவின் யார் அந்த சார் என்ற கண்டன போஸ்டர்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பேக் டூ ட்ராக் என்ற பேச்சும் வந்துள்ளது. இதற்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தான் காரனம் இந்த போராட்டத்திற்கு பின் இருக்கும் மாஸ்டர்மைண்ட் ஐபேக் தான் என கூறப்படுகிறது.