யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு
பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சார் என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இங்கே அப்படி இல்லை
அண்ணா பல்கலை விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாகளைச் சந்தித்த அமைச்சரிடம் யார் அந்த சார் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் “பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சார் என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இங்கே அப்படி இல்லை. குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளி உடனடியாக பிடிகப்பட்டு முதல் கட்ட நிவாரணமாக அவர் கட்டோடு இருந்ததை பார்த்திருப்பீர்கள். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பே ஒரு வரவேற்க மிக்க தீர்ப்பு. இந்த விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்குகின்றனர். எடப்பாடி பழனிசாமி இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவரை நோக்கி மக்கள் போராடுகின்ற சூழல் உருவாகிவிடும் என்று அவருக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை டவுன்லோடு செய்து அனுப்புகிறோம். எந்த போராட்டமாக இருந்தாலும் அதன் நோக்கம் என்னவாக இருக்கவேண்டுமென்றால் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். போராட்டம் எதற்கு என்ற கவனத்தை ஈர்க்க வேண்டும். இவர்கள் கையில் எடுக்கும் போராட்டத்தை பொறுத்தவரையில் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக ஜாமினில் வெளிவரமுடியாத அளவு கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்படி நாள்தோறும் போராட்டம், போராட்டம் என வீதிக்கு வருகின்ற போது, சுயவிளம்பரத்துக்காக செய்கின்ற போராட்டங்களால் மக்கள் படும் துயரத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. வேலைக்கு நேரத்திற்கு செல்ல முடியவில்லை. போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. விமான நிலையத்துக்கு, ரயில் நிலையத்துக்கு, பேருந்து நிலையத்துக்கு நேரத்திற்கு செல்ல முடியவில்லை. அவர்களை கைது செய்து விடுவித்துவிடுகின்றனர். எந்த ஒரு அடக்குமுறையும் செய்வதில்லை. யாரவாது ஒருவராவது அண்ணா பல்கலை விவகாரத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றிருக்கிறார்களா? சொல்லுங்கள். எப்படி இதை அடக்குமுறை என்று பார்க்க முடியும். மக்கள் நிலையையும் இந்த போராட்டக்காரர்கள் சிந்திக்க வேண்டும். 3 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தால் எப்படி?
மெட்ரோ, மழைநீர் வடிகால் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த செயற்கையான தடைகள் எதற்கு என்றே கைது செய்யப்படுகின்றனர். இது ஒடுக்குமுறை அல்ல. மறப்போம், மன்னிப்போம். மறப்போம் என்றுதான் அரசு செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.