November 2024 bank holidays: ரவுண்டா 13 நாட்கள் வங்கிகள் விடுமுறை - தமிழ்நாடு உட்பட மாநில வாரியான நவம்பர் மாத லிஸ்ட் இதோ
November 2024 bank holidays: நவம்பர் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற, விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
November 2024 bank holidays: தமிழ்நாடு உட்பட மாநில வாரியாக நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத வங்கி விடுமுறை:
தேசிய மற்றும் உள்ளூர் விடுமுறைகள் காரணமாக நவம்பர் மாதத்தில் வங்கிகள் 13 நாட்களுக்கு இயங்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி அதன் இணையதளத்தில் மாநில வாரியாக பிராந்திய மற்றும் தேசிய விடுமுறை நாட்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளி அமாவாசை (லக்ஷ்மி பூஜை), குட் பண்டிகை, கன்னட ராஜ்யோத்சவா, பலிபாட்யமி, விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம், சாத் (மாலை அர்க்யா), சாத் (காலை அர்க்யா)/வங்களா விழா, ஈகாஸ்-பகவால், குருநானக் ஜெயந்தி/கார்த்திகை ஆகிய காலங்களில் வங்கிகள் மூடப்படும். பூர்ணிமா/ரஹாஸ் பூர்ணிமா, கனகதாச ஜெயந்தி, செங் குட்ஸ்னெம் ஆகிய நாட்களில் வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாட்கள் வங்கிகள் விடுமுறை:
- நவம்பர் 1: தீபாவளி, குட் பண்டிகை மற்றும் கன்னட ராஜ்யோத்சவாவை முன்னிட்டு திரிபுரா, கர்நாடகா, உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர், மகாராஷ்டிரா, மேகாலயா, சிக்கிம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
- நவம்பர் 2: தீபாவளி (பலி பிரதிபதா)/பலிபாத்யமி/லக்ஷ்மி பூஜை (தீபாவளி)/கோவர்தன் பூஜை/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினத்தில் குஜராத், மகாராஷ்டா, கர்நாடகா, உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
- நவம்பர் 7: மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சாத் (மாலை அர்க்யா) விழாவில் சில மாநிலங்களில் உள்ள வங்கிகள் இயங்காது.
- நவம்பர் 8: பீகார், ஜார்கண்ட் மற்றும் மேகாலயா மாநிலங்களில் சாத் (காலை அர்க்யா)/வாங்கலா பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
- நவம்பர் 12: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஈகாஸ்-பக்வாலின் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
- நவம்பர் 15: குருநானக் ஜெயந்தி/கார்த்திகா பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமாவை முன்னிட்டு மகாராஷ்டிரா, மிசோரம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, சண்டிகர், உத்தரகாண்ட், தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், நாகாலாந்து, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஸ்ரீநகர் மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
- நவம்பர் 18: கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
- நவம்பர் 23: செங் குட்ஸ்னெம் பண்டிகையை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகள் இயங்காது.
இதைத்தவிர நான்கு நாட்கள் ஞாயிறு பொதுவிடுமுறை மற்றும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என, மற்றொரு 5 நாட்களிலும் வங்கிகள் நாடு முழுவதும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.