Virat Kohli Restaurants | விராட் கோலியின் உணவகங்களில் இப்படி ஒரு விஷயம் நடக்குதா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..
விராட் கோலியின் ஒன் 8 கம்யூன் என்ற செயின் ரெஸ்டாரண்ட் உணவகங்களில் பால் புதுமையினர் அனுமதி மறுக்கப்பட்டதாக LGBTQIA+ அமைப்பினர் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் விராட் கோலி சொந்தமாக ஒன் 8 கம்யூன் என்ற சங்கிலித் தொடர் உணவகங்கள் வைத்துள்ளார். இந்த உணவகங்களுள் புனேவில் உள்ள ஒரு கிளையில் பால் புதுமையினருக்கு அனுமதி மறுக்கபட்டதாக அந்த அமைப்பினர் இன்ஸ்டாகிராமில் பெரிய பதிவு ஒன்றை இட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக கோலியின் உணவக நிர்வாகத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. விராட் கோலிக்குச் சொந்தமான ஒன் 8 கம்யூன் சங்கிலித் தொடர் உணவகங்களின் புனே கிளை, பால் புதுமையினர், ஆண் அல்லது பெண் இருதரப்பினருக்குமே மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் ஆண்/பெண் உறவு நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறுவதாக இந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இன்ஸடாகிராமில் "உங்கள் உணவகங்கள் இன பாகுபாடுகளை கடைப்பிடிக்கின்றன விராட் கோலி, ஆனால் இது உங்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம், ஆனால் ஒரு பிரிவினருக்கு இடையே இத்தகையை பாகுபாடு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் உணவகங்களில் மற்ற கிளைகளிலும் இதே போன்ற பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. நீங்கள் உடனடியாக இதனை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவகங்களுக்கு சமத்துவ உணர்வை கற்றுக்கொடுங்கள், பாகுபாடு காட்டும் உணவு விநியோக அமைப்புகளை உங்கள் உணவகங்கள் ஆதரித்தல் கூடாது” என்று இன்ஸ்டாகிராமில் கோலியை டேக் செய்து நேரடியாக பால் புதுமையினர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பெரிய உணவகங்கள்தான் இத்தகைய பாகுபாட்டு நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றன. இதிலிருந்துதான் உங்களுக்கு பெரிய அளவு வருமானம் வருகிறது எனும்போது பாகுபாடு பார்ப்பது சரியல்ல என்று அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் சொல்கிறது.
View this post on Instagram
இதற்கு பதில் அளித்த விராட் கோலியின் உணவக நிர்வாகம், “நாங்கள் பாலின பேதம் பாராட்டவில்லை. மாறாக, தனியாக வரும் ஆண்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்றுதான் கூறியுள்ளோம். இது எதனால் எனில் வளாகத்தில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதே தவிர பாலின பேதமெல்லாம் இல்லை” என்று புனே கிளை மேலாளர் அமித் ஜோஷி நாளேடு ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன் 8 கம்யூன் சார்பில் மறுப்பு தெரிவித்து பாலின பேதம் மட்டுமல்ல. மற்ற எந்த பேதங்களும் பாகுபாடுக்கும் இங்கு இடமில்லை என்ற தொனியில் பதிவு வெளியிட்டுள்ளது.